📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 05:03 PM

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்

1,562 விநாயகர் சிலைகள்

4 இடங்களில் கரைக்க ஏற்பாடு

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்த டங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு சென்று அவர்களுக்குரிய சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும்.

சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலைகளை கரைப்ப தற்கு உபகரணங்கள் மட்டுமின்றி, படகுகள் உதவி கொண்டும் சிலை களை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம் புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் கள் மற்றும் டிரோன் மூலம் கண்காணித்தும், குதிரைப்படைகள் மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

இந்தநிலையில் சிவசேனா சார்பில் தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்க ரணை, பல்லாவரம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்த 75-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மேளதாளத்துடன் வேன்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த விநாயகர் சிலைகள், பாலவாக்கம் பல்கலை நகர் கடலில் 2 டிராலிகள், 2 கிரேன்கள் உதவியுடன் கடலில் கரைக்கப்பட்டன. இதை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.