📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 18, 2026 12:01 PM

BSNL ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு : தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

BSNL ஊழியர்களுக்கான தீபாவளி பரிசு : தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

BSNL நிறுவன ஊழியர்களின் தேசிய கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகத்திற்கும் ஊழியர் சங்கத்திற்கும் இடையே பல ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த ஆலோசனையில் ஊழியர்களுக்கான கோரிக்கைகள் சங்க நிர்வாகிகளின் மூலம் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில் ஊழியர்களின் ஊதிய உயர்வு, SAB, படிகள் சீரமைப்பு, பண்டிகைக்கால முன்பணம் போன்ற பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் கண்டிப்பாக BSNL நிறுவன ஊழியர்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எனவே இந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளும் எடுக்கப்பட்ட முடிவுகளும் என்ன என்பதை விரிவாக பார்த்து தெரிந்துகொள்வோம்பண்டிகைக்கால முன்பணம்தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் BSNL ஊழியர்கள் பண்டிகை கால முன்பணத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்த 1 அல்லது 2 மாதங்களுக்குள் பண்டிகை கால முன் பணம் வழங்கப்படும் என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதுஓய்வூதிய நிதி பங்களிப்பு உயர்வுBSNL நிர்வாகம் ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் DA தொகையில் முழுமையாக 30 % பங்களிப்பை ஓய்வூதிய நிதியில் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது நிர்வாகம் 25.1% மட்டும் தான் செலுத்தி வருகின்றது. எனவே தான் ஊழியர்கள் பங்களிப்பை 30 % ஆக உயர்த்துமாறு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த கோரிக்கையை படிப்படியாக பூர்த்தி செய்ய குழு முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றதுபடி சீரமைப்புதற்போதைய விலைவாசியை கருத்தில் கொண்டு ஊழியர்கள் வீட்டு வாடகை, போக்குவரத்து படிகள் ,குழந்தைகளின் கல்வி ஊக்கத்தொகை போன்றவற்றை உயர்த்துமாறு கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து இந்த படிகளை மறுஆய்வு செய்வதற்கு குழுவில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கத்தின் பிரதிநிதியை சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மெல்ல மெல்ல இந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதுஊதிய மாற்றம்BSNL நிறுவனத்தின் non executive ஊழியர்களின் ஊதிய மாற்றம் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்ட நிலையில் விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நிலுவை தொகை வழங்கப்பட்டு ஊதிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்பட்டு இருக்கின்றது