📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 15, 2026 12:03 PM

அம்பத்தூரில் பிரமாண்ட தரவு மையம்; சிங்கப்பூர் துணை பிரதமரும், முதல்வர் விஜய்யும் திறந்து வைத்தனர்

அம்பத்தூரில் பிரமாண்ட தரவு மையம்; சிங்கப்பூர் துணை பிரதமரும், முதல்வர் விஜய்யும் திறந்து வைத்தனர்

அம்பத்தூரில் பிரமாண்ட தரவு மையம்; சிங்கப்பூர் துணை பிரதமரும், முதல்வர் விஜய்யும் திறந்து வைத்தனர்

சென்னை: சென்னை அம்பத்தூரில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் பிரமாண்ட தரவு மையத்தை முதல்வர் விஜய் பார்வையிட்டார். இதற்காக, அங்கு சென்ற அவரை அங்கு கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்றனர்.

2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் நிறுவனம் 4 ஏக்கரில் இந்த தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐடி கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக, ரூ.5 ஆயிரம் கோடியில் 56 மெகாவாட் மின்சாரத்திறன் கொண்ட தரவு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 4,900 சர்வர் ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரமாண்ட தரவு மையத்தை சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங்குடன் முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார்.

இதன் ஒரு பகுதியை இருவரும் கூட்டாக திறந்து வைத்தனர். சிங்கப்பூரின் பாரம்பரிய முறைப்படி அன்னாசிப்பழத்தை உருட்டி விட்டு இந்த மையத்தை திறந்து வைத்தனர். இந்த தரவு மையம் அடுத்தாண்டு பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இதன்மூலம், 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் மழைநீர் சேகரிப்பு பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகளை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.