📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 17, 2026 12:31 PM

அம்பானியால் தவிர்க்க முடியாத கெஸ்ட் ஆகிவிட்ட அட்லீ.. எதற்கும் விடமாட்டேங்கிறாரே!

அம்பானியால் தவிர்க்க முடியாத கெஸ்ட் ஆகிவிட்ட அட்லீ.. எதற்கும் விடமாட்டேங்கிறாரே!

மும்பை: தமிழில் சில படங்களை மட்டுமே இயக்கிய் அட்லீ; இப்போது பான் இந்தியா அளவில் பெரிய இயக்குநர். ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றி கண்ட அவர்; இப்போது அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா படத்தை இயக்கிவருகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. பல நட்சத்திரங்கள் நடித்துவருகிறார்கள். இந்நிலையில் அம்பானியால் தவிர்க்க முடியாத கெஸ்ட்டாக அட்லீ மாறிவிட்டார் என்றே தெரிகிறது.

ஷங்கரிடம் சினிமா தொடர்பான வேலைகளையும், ஐடியாக்களையும் கற்றுக்கொண்டு ராஜா ராணி படத்தை இயக்கியவர் அட்லீ. அந்தப் படம் மௌன ராகம் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக இருந்தாலும்; அவரது மேக்கிங், வசனங்கள் உள்ளிட்டவைகள் எல்லாம் ஈர்த்துவிட; படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை வரிசையாக இயக்கினார். அவற்றில் பிகில் மட்டும் தோல்வியை சந்தித்தது.

ஹிந்தியில் வெற்றி: இங்கே மாஸ் ஹீரோவுடன் வேலை செய்த அவர்; அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வந்தது. தமிழிலிருந்து சென்று ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுவிட்டார். மேலும் ஷாருக்கின் குட் புக்கிலும் அவர் இடம்பிடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

அடுத்த படமும் பிரமாண்டம்: அட்லீயின் படங்கள் என்றாலே இப்போது இந்திய அளவில் ஒரு எதிர்பார்ப்பு வந்துவிட்டது. அதன்படி, அல்லு அர்ஜுனை வைத்து அவர் இயக்கிவரும் ராக்கா படத்துக்கு இப்போதே ஹைப் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லீ மீது உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டை இந்தப் படத்தில் முதலீடு செய்திருக்கிறது. இதில் தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

படம் ஹிட்டாகுமா?: இது சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையாக உருவாகும் என தெரிகிறது. படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக வெளிநாட்டில் ஒரு முன்னணி நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார்கள். ஜவானில் எடுத்த ஆயிரம் கோடி ரூபாயை இதிலும் எடுத்து; தென்னிந்திய படங்களும் அசால்ட்டாக ஆயிரம் கோடி அடிக்கும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக தெரிகிறது. முதலில் இந்தப் படம் இந்த வருடத்திலேயே ரிலீஸாவதாக இருந்தது; ஆனால் சில காரணங்களால் அடுத்த வருடத்துக்கு தள்ளி போயிருக்கிறது.

அம்பானியின் கெஸ்ட்: பாலிவுட்டுக்கு அட்லீ சென்றதிலிருந்து அவரது ரேஞ்சே வேற என்றுதான் சொல்ல தோன்றுகிறது. பெரும் பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வீட்டு திருமணத்தில் உலகம் முழுவதுமிலிருந்து வந்த விவிஐபிக்களுடன் அட்லீயும் தனது மனைவியுடன் கலந்துகொண்டார். அதேபோல் எந்த ஃபங்ஷனாக இருந்தாலும் அம்பானி வீட்டிலிருந்து தவறாமல் அட்லீக்கு அழைப்பு சென்றுவிடுகிறது.

நேற்று அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில்கூட அட்லீயும், அவரது மனைவி பிரியாவும் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. ஆகமொத்தம் பாலிவுட் சென்றதிலிருந்து அம்பானியின் தவிர்க்க முடியாத கெஸ்ட் லிஸ்ட்டில் அட்லீ சேர்ந்துவிட்டார். வாழ்த்துகள் இயக்குநரே..