Sports
September 27, 2026 09:04 AM
ஆண்கள் குண்டு எறிதல் வெள்ளி வென்றார் தூர்
ஆண்கள் குண்டு எறிதல் வெள்ளி வென்றார் தூர்
ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்கள் குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர்பால் சிங் தூர் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஷாட் புட் பைனலில் நேற்று ஹாட்ரிக் தங்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய தேஜிந்தர்பால் கடும் போட்டிக்கிடையே தனது 5வது வாய்ப்பில் 20.64 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடம் பிடித்தார். தொடர்ச்சியாக 3 ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் 2 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் ஈரான் வீரர் டயேபைஸ் முகமதுரெஸா தங்கப் பதக்கமும் (20.86 மீட்டர்), சவுதி அரேபியாவின் முகமது டோலு (20.48 மீ.) வெண்கலமும் வென்றனர்.மற்றொரு இந்திய வீரர் கரண்வீர் தனது முதல் 3 வாய்ப்பில் அதிகபட்சமாக 18.40 மீட்டர் தூரம் மட்டுமே எறிந்து டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் பைனலுக்கு முன்னேறத் தவறினார்.
தொடர்புடைய செய்திகள்
Sports