📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 16, 2026 04:03 AM

2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு

2 மாதங்களுக்கான அரிசி, பருப்பு முன்கூட்டியே வழங்க முடிவு

சென்னை: தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், இரு மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை, முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, 20 கிலோ இலவசமாகவும், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, லிட்டர் பாமாயில், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. தென் மேற்கு பருவ மழை குறைந்ததால், பல மாநிலங்களில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்ததால், அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை, கிலோவுக்கு 20 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளன. இது மக்களுக்க பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் விலை உயர்வை, அரசு கட்டுப்படுத்த தவறியதாக, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில், நவ., டிச., மாத ரேஷன் பொருட்களை, இம்மாத இறுதியில் இருந்தே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்றார்.

ரேஷன் கடைகளில், அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், அரிசி வாங்குவதில்லை. தற்போது, அரிசி விலை உயர்ந்துள்ளதால், அதை வாங்காதவர்கள் கூட வாங்கி வருவதால், ரேஷன் அரிசிக்கு மவுசு கூடியுள்ளது.