📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 15, 2026 11:03 AM

11.4 லட்​சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்

11.4 லட்​சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்

புதுடெல்லி: நாடு முழு​வதும் உள்ள சுமார் 11.4 லட்​சம் ரயில்வே ஊழியர்​களுக்கு 2025-26-ம் ஆண்​டுக்​கான உற்​பத்​தித் திறன் அடிப்படையில் தீபாவளி போனஸாக 78 நாள் ஊதி​யத்தை வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதற்​காக, மொத்தம் ரூ.2,009.61 கோடி செல​விடப்பட உள்​ளது.

பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று நடை​பெற்ற மத்திய அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது. இதன்​படி, தகு​தி​யுள்ள ரயில்வே ஊழியர்​களுக்கு 78 நாள் ஊதியத்துக்கு இணை​யான போனஸ் வழங்​கப்​படும்.

ஒரு ஊழியருக்கு அதி​கபட்​ச​மாக ரூ.17,951 வழங்​கப்​படும். இந்த போனஸ் திட்​டத்​தின் கீழ், ரயில் பாதை பராமரிப்​புப் பணியாளர்கள், ரயில் ஓட்​டுநர்​கள், ரயில் மேலா​ளர்​கள் (கார்டுகள்), நிலைய மேலா​ளர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள், தொழில்​நுட்​பப் பணி​யாளர்​கள், தொழில்​நுட்ப உதவி​யாளர்​கள், பாயின்ட்​ஸ்​மேன்​கள், அமைச்​சுப் பணி​யாளர்​கள் மற்​றும் பிற குரூப் சி ஊழியர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பிரி​வினர் பயன்பெறுவர்.

துர்கா பூஜை மற்​றும் தசரா பண்​டிகைகளுக்கு முன்​ன​தாக ஒவ்வோர் ஆண்​டும் இந்த தீபாவளி போனஸ் வழங்​கப்​படு​கிறது. ரயில்வே ஊழியர்​களை ஊக்​கு​விப்​பதுடன், ரயில்வே துறை​யின் செயல்​திறனை மேம்​படுத்த அவர்​களை உற்​சாகப்​படுத்​தும் நோக்கில் இந்த போனஸ் வழங்​கப்​படு​வ​தாக மத்​திய அரசு தெரிவித்​துள்​ளது.

2025-26-ம் ஆண்​டில் ரயில்வே துறை சிறப்​பாகச் செயல்​பட்​டு, 1,670 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்​டதுடன், சுமார் 741 கோடி பயணி​களை​யும் கையாண்​டுள்​ளது. ரயில்வே துறை​யின் செயல்​பாட்​டில் ஊழியர்​களின் பங்​களிப்​பைப் பாராட்​டும் வகை​யில், ஆண்​டு​தோறும் உற்​பத்​தித் திறன் அடிப்​படையி​லான போனஸ் வழங்​கப்​பட்டு வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.