📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 11, 2026 07:34 AM

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு..!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு..!

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியீடு..!

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொடர்பாகத் தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.953.06 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.75,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்கனவே ரூ.35,000 விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது எஞ்சிய ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர்.

கடந்த மே மாதம், கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.இருந்தாலும், பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தள்ளுபடி வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இருந்து வந்த கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்தது. ரூ. 75,000 வரை: விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தொகை ரூ. 75,000 வரை இருந்தால் அது முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். (முன்பு அறிவிக்கப்பட்ட ரூ. 50,000 என்ற வரம்பிலிருந்து தற்போது ரூ. 75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை: இத்தொகைக்குள் கடன் பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இவர்கள் ஏற்கனவே பெற்ற தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ. 40,000 வரை பலன் பெறுவர். ரூ. 1 லட்சத்திற்கு மேல்: ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு அதிகபட்ச வரம்பாக ரூ. 35,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இந்த திருத்தப்பட்ட தள்ளுபடி திட்டத்தின் மூலம் கூடுதலாக 2.38 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். ஒட்டுமொத்தமாக இத்திட்டம் ரூ. 6,220 கோடி செலவில் சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு வாழ்வாதார ஆதரவை வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில், கூடுதல் நிவாரணம் வழங்கும் வகையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.75 ஆயிரம் வரை பெறப்பட்ட பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரையும் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் சலுகை மூலம் 2.38 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,220 கோடி அளவிலான பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.