"வாழ்க்கையில் புதிதாக கற்க விரும்புவோருக்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி.."
சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
ஒலிம்பிக் போட்டிகள்
பின்னர் அந்த பொன்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
2047-க்குள் இந்தியாவை மேம்படுத்துவோம். அதைச் செய்வோம். உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்வோம். அதைச் செய்வோம். சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம். அதைச் செய்வோம். உலகளாவிய உற்பத்தி மையமாகத் திகழ்வோம். அதைச் செய்வோம். ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம். அதைச் செய்வோம். நிலவில் இந்தியரைத் தரையிறக்குவோம். அதைச் செய்வோம். ஆம், அதைச் செய்வோம். தமிழ்நாட்டை மேம்படுத்துவோம். இந்தியாவை மேம்படுத்துவோம்
உங்களுக்கான காலம்
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கத் தேவையான புதிய யோசனைகளும் தீர்வுகளும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்ல, உலகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும். இன்று உலகம் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறது; அந்தத் தீர்வுகளை வழங்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டி
2014-ல் இந்தியாவில் 750 பல்கலைக்கழகங்கள் இருந்தன. தற்போது 1,300க்கும் அதிகமாக உள்ளன. கல்லூரிகளின் எண்ணிக்கை 38,000-லிருந்து 52,000க்கும் அதிகமாகி இருக்கிறது.
வித்தியாசமாகச் சிந்தியுங்கள்
இவ்வாறு அவர் கூறினார்.