📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 06, 2026 07:03 AM

டீம் அடிச்ச 55 ரன்களுக்கு இந்த திமிர் தேவையா? பாகிஸ்தான் கேப்டன் சனாவை வெளுக்கும் ரசிகர்கள்

டீம் அடிச்ச 55 ரன்களுக்கு இந்த திமிர் தேவையா? பாகிஸ்தான் கேப்டன் சனாவை வெளுக்கும் ரசிகர்கள்

டீம் அடிச்ச 55 ரன்களுக்கு இந்த திமிர் தேவையா? பாகிஸ்தான் கேப்டன் சனாவை வெளுக்கும் ரசிகர்கள்

துபாய்: மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவை வீழ்த்திய பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா, அவரை ஆக்ரோஷமான முறையில் வழியனுப்பி வைத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 56 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கிப் பதிலளித்து ஆடிய இந்திய அணிக்கு, ஷஃபாலி வர்மா அதிரடியான தொடக்கம் தந்தார்.

தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த அவர், இந்திய அணியை 8 பந்துகளில் 14 ரன்களுக்குக் கொண்டு சென்றார். ஆனால், பாகிஸ்தானின் முன்னணி ஆல்-ரவுண்டரான ஃபாத்திமா சனா வீசிய ஓவரில், பந்தை அடிக்க முயன்ற ஷஃபாலி வர்மா டாப்-எட்ஜ் ஆகி பந்துவீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா மிகுந்த ஆக்ரோஷத்துடன் கத்தி, ஷஃபாலி வர்மாவை Dressing room நோக்கிச் செல்லுமாறு சைகை காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே ஓவரின் கடைசி பந்தில் பிரதிகா ராவலையும் அவுட் ஆக்கிய ஃபாத்திமா சனா, தனது அடுத்த ஓவரில் ஸ்மிருதி மந்தனாவை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தி இந்திய அணிக்கு ஆரம்பக்கட்ட அதிர்ச்சி அளித்தார். பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சர்வதேச டி20 போட்டியில் பவர்பிளேயில் ஃபாத்திமா சனா 3 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பு கராச்சியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அவர் இந்த சாதனையைப் படைத்திருந்தார்.இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இப்படியொரு சாதனையை இரண்டு முறை செய்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும், இந்திய மகளிர் அணிக்கு எதிராக பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒட்டுமொத்தப் பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

ஃபாத்திமா சனாவின் சிறப்பான பந்துவீச்சு ஒருபுறம் இருந்தாலும், பாகிஸ்தானின் மற்ற பந்துவீச்சாளர்களால் விக்கெட் எதுவும் வீழ்த்த முடியாததால் இந்திய அணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில், இந்திய அணி 8.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 18 ரன்களுடனும், தீப்தி சர்மா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 55 ரனகள் மட்டுமே அடித்து விட்டு ஒரு விக்கெட் எடுத்துவிட்டுஇந்த ஓவர் சீன் தேவையா என்று பாகிஸ்தான் வீராங்கனை பாத்திமா சனாவை விமர்சித்து வருகின்றனர்.