📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 04:03 PM

தவெக அரசின் வெற்றி பயண திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

தவெக அரசின் வெற்றி பயண திட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: தவெக அரசின் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தை, கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். இத்திட்டத்தை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, தனியார் பஸ் உரிமையாளர் கலாமணி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவில் அவர், ''இழப்பீடு வழங்கி, தனியார் பஸ்களிலும், 'வெற்றிப் பயணம்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற, தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை, தமிழக அரசு ஏற்கவில்லை. சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்த, இத்திட்டம் தொடர்பாக, எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை.இத்திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை, 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு, இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், இன்று (அக் 05) விசாரணைக்கு வந்தது. ''தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டத்தை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்; வெறும் இரண்டு வழித்தடங்களில் மட்டுமே பஸ் இயக்க அனுமதி பெற்றுள்ள மனுதாரர், மாநிலம் முழுவதும் பொருந்தக்கூடிய ஒரு அரசு முடிவை எவ்வாறு எதிர்க்க முடியும்?

மனுதாரர் தான் பஸ் இயக்கும் வழித்தடங்கள் தொடர்பாக மட்டுமே, அந்த முடிவை எதிர்த்துப் போராட முடியும். சட்டசபையில் விதி 110ன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்பை மட்டுமே மனுதாரர் எதிர்த்துள்ளார்; அரசாணையை அவர் எதிர்க்கவில்லை; சட்டப்படி தீர்வு காண மனுதாரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். பிறகு மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரத்யேக வீடியோ!

வெற்றி பயண திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி; முழு விவரம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்