தங்குமிடம் வசதி குறித்து புலம்பாமல், கிடைத்த வாய்ப்பை சிறப்பான பயன்படுத்தனும்.. மனு பாக்கர் அட்வைஸ்
தங்குமிடம் வசதி குறித்து புலம்பாமல், கிடைத்த வாய்ப்பை சிறப்பான பயன்படுத்தனும்.. மனு பாக்கர் அட்வைஸ்
ஐச்சி: ஆசிய போட்டி 2026 தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்தி சென்ற வாய்ப்பு துப்பாக்கி சுடும் வீரரான மனு பாக்கருக்கு கிடைத்தது. 2024 ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று சாதனை படைத்த நிலையில், அவருக்கு இந்த கவுரவம் கிடைத்தது. கபடி வீரர் பவன் செரவாத்துடன் இணைந்து ஜப்பான்னில் உள்ள ஐச்சியில் வீரர்களை அணிவகுத்து சென்றார்.
இது குறித்து மைக்கேல் இணைய தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "நேர்மையாகச் சொன்னால், நேற்று எனக்கு இது தெரிந்தபோது, என் ஆரம்ப நாட்களின் நினைவுகள் எல்லாம் திரும்ப வந்தன. நான் தொடங்கியபோது, ஒருநாள் என் விளையாட்டில் இவ்வளவு தூரம் வந்துவிடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இது மிகவும் இதயத்தைத் தொடும் உணர்வு."
"என் நாட்டிற்குக் கொடியை ஏந்தி செல்லும் பொறுப்பு அவருக்கு கிடைத்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மதிப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன். கடவுளுக்கு நன்றி, எல்லோருக்கும் அவர்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்."
"2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான் போட்டியிட்டபோது எனக்கு வயது வெறும் 16. இது என் மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டி. 2018-ல் நாங்கள் பலேம்பாங்கில் (இந்தோனேசியா) இருந்ததால் தொடக்க விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் முதல்முறையாக தொடக்க விழாவில் கலந்துகொண்டது காமன்வெல்த் போட்டிகளில். அப்போது என் பயிற்சியாளர் ஜஸ்பால் ரானா சார் சொன்னார். 'நீ கொடியை எந்தி செல்லும் பொறுப்பு இருந்தால் மட்டும் விழாவில் கலந்துகொள்ள அனுமதிப்பேன்."
"இல்லையென்றால் இல்லை' என்றார். ஏனென்றால் எங்கள் போட்டிகள் பொதுவாக தொடக்க விழாவுக்கு அடுத்த நாளே தொடங்கிவிடும், அதனால் எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே தொடக்க விழாக்களில் நான் கொடியாளராக இருப்பேன் அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பேன்."
"ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். ஆம், சில பிரச்சினைகள் இருக்கும். சமூக ஊடகங்களில் சில பிரச்சினைகள் பரவிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ஆனால் என்ன பிரச்சினைகள் இருந்தாலும், இது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு மற்றும் அனுபவம்."
"புகார் சொல்வதற்குப் பதிலாக இந்த நேரத்தை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். நாம் தயாராக இருப்பதைப் போலவே சிறப்பாகச் செயல்பட முயற்சிக்க வேண்டும். இங்கு வர நாம் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம். இது சரியல்ல, அது சரியல்ல என்று சுட்டிக்காட்டி நம் ஆற்றலை வீணடிக்கக் கூடாது. பதக்கம் வரலாம் அல்லது வராமல் போகலாம். அது வேறு விஷயம். ஆனால் நம்மால் முடிந்த சிறந்ததை நாம் கொடுக்க வேண்டும். நிறைய இந்தியர்கள் நமக்காக ஆர்ப்பரிப்பார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி, அனைவருக்கும் வாழ்த்துகள், கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக" என்று மனுபாக்கர் கூறினார்.