தமிழ்நாடில் தவெக வெற்றி பெற்றதற்கு முழு காரணம் என்ன..! அம்பலமான முழு உண்மை...
தமிழ்நாடில் தவெக வெற்றி பெற்றதற்கு முழு காரணம் என்ன..! அம்பலமான முழு உண்மை...
சென்னை: தமிழ்நாட்டில் தவெக ஒரு தொகுதியை கூட வெல்லாத 8 மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் மிக குறைந்த வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற தவெக திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகளில் வாக்காளர் நீக்கப்பட்டதன் எதிரொலியாக தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக தவெக ஒரு தொகுதியை கூட வெல்லாத 8 மாவட்டங்களில் எஸ்ஐஆர் இல் மிக குறைந்த வாக்காளர்களே நீக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
விழுப்புரம், தென்காசி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, அரியலூர், நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள 33 தொகுதிகளில் தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை எஸ்ஐஆர்க்கு முன்னும் பின்னும் உள்ள வாக்காளர் பட்டியலின் படி விழுப்புரத்தில் சராசரியாக ஒரு தொகுதியில் 20 ஆயிரத்து 119 பேர் நீக்கப்பட்டுள்ளார், கன்னியாகுமரியில் தொகுதிக்கு சராசரியாக 13 ஆயிரத்து 720பேர் எஸ்ஐஆர் இல் நீக்கப்பட்டுள்ளார், அரியலூரில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 7 ஆயிரத்து 936 பேர் மட்டுமே நீக்கப்பட்ட நிலையில் இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தவெகவால் வெல்ல முடியவில்லை.
இதைப்போல நாகையில் தொகுதிக்கு சராசரியாக 13 ஆயிரத்து 261 பேரும், நீலகிரி மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 14 ஆயிரத்து 10 பேரும் நீக்கப்பட்டுள்ளனர், ஆளும் தவெக அனைத்து தொகுதிகளையும் இழந்த மயிலாடுதுறை மாவட்டத்திலும் குறைந்த அளவில் தொகுதிக்கு 18 ஆயிரத்து 94 பேர் நீக்கப்பட்டுள்ளனர், தென்காசி, திருவாரூரில் தொகுதிக்கு சராசரியாக 22 ஆயிரத்து 136 பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களிலும் தவெகவிற்கு புஜ்ஜியமே கிடைத்தது.
வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கப்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெற்ற நிலையில் குறைந்த அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாதது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.