தமிழ் சினிமாவில் வித்தியாசமான பேய் கதை... சமுத்திரக்கனியின் ‘கஸ்தூரி வீடு’
புனித நூலான பைபிள் மற்றும் குர்ஆனில் சொல்லப்படும் தஜ்ஜால் என்ற ஒரு சாத்தானை பற்றிய கதையின் பின்னணி தான் இப்படம். இந்த படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமாக நடித்துக் கொடுத்துள்ளனர். குறிப்பாக சமுத்திரக்கனி கதாபாத்திரமாகவே மாறி அசத்தினார். என 'கஸ்தூரி வீடு' படம் குறித்து படக்குழுவினர் கூறியுள்ளனர்.
லயன்வி பிலிம்ஸ், ரென்டெக் பிலிம்ஸ் சார்பில் எம்.ஜே.எப். லைன் டாக்டர் வாகேஷ், ராணி ஸ்ரீரெட்டி தயாரித்து விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், பீமாஸ் அசோக் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம், 'கஸ்தூரி வீடு'. இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'கஸ்தூரி வீடு' படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:-
வித்தியாசமான ஒரு கதை
நான்கு மடங்கு செலவு
இந்த படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமாக நடித்துக் கொடுத்துள்ளனர். குறிப்பாக சமுத்திரக்கனி கதாபாத்திரமாகவே மாறி அசத்தினார். கதாநாயகி தனுஜா பயந்து அழும் காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே நடித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. படம் ஆரம்பித்ததை விட முடித்தபோது பெரிதாகி செலவு நான்கு மடங்கு ஆகி விட்டது. பலரும் இவ்வளவு செலவு தேவையா? என்றார்கள்.
விரைவில் தியேட்டர்களில்
ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும் என்று நான் கூறுவேன். தயாரிப்பாளர்கள் எம்.ஜே.எப். லைன் டாக்டர் வாகேஷ், ராணி ஸ்ரீரெட்டி நாங்கள் இருக்கிறோம் என்று கூறி படத்தை சிறப்பாக எடுக்க ஊக்கம் தந்தார். இந்த நல்லப் படத்துக்கு அனைவருமே ஆதரவு தாருங்கள். படம் விரைவில் திரைக்கு வருகிறது, என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.