📅 Thursday, 08 October 2026 IST | புரட்டாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 08, 2026 01:03 PM

தலைமை தேர்தல் கமிஷனர் நியமன விவகாரத்தில் புதிய மனு; சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு

தலைமை தேர்தல் கமிஷனர் நியமன விவகாரத்தில் புதிய மனு; சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்பு

தேர்தல் கமிஷனர் நியமன சட்டம்

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியை நீக்கி மத்திய மந்திரி ஒருவரை சேர்க்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம்-2023 எனப்படும் இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி திபாங்கர் தத்தா, சதிஷ் சந்திரா சர்மா அமர்வு விசாரித் தது. இந்த வழக்கை அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மத்திய அரசு அறி வுறுத்தியது.

நீதிபதிகள் மாறுபட்ட கருத்து

எனினும் இந்த விவகாரத்தில் நீதிபதிகள் இைேடய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதாவது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு நீதிபதி திபாங்கர் தத்தா உடன்படாத நிலையில், சதிஷ் சந்திரா சர்மா ஆதரவு தெரிவித்தார். பின்னர் கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஒருமித்த முடிவு எட்டப்படாததால், அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை திரும்ப பெறக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா அமர்வு முன்பு ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராய ணன், மனுவை விசாரணைக்கு ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

விசாரணைக்கு ஏற்பு

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் விவ காரத்தில் நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியதால் இதை தாக் கல் செய்ததாக அவர் தெரிவித்தார். அதை ஏற்று மனுவை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் இடைநிலை மனுக்கள் நிலுவையில் உள் ளதா? என நீதிபதிகள் கேட்க, நிவாரண மனு ஒன்று விசாரணையில் இருப்பதாக வக்கீல் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார். ஆனால் இந்த மனு தனியா னது என்றும் அவர் கூறினார். பின்னர், 'இந்த மனு மீது நாங்கள் விசாரித்து ஒரு முடிவு எடுப்போம்' என நீதிப திகள் அவரிடம் தெரிவித்தனர்.