📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 18, 2026 01:03 AM

தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்: வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் வேண்டுகோள்

தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்: வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் வேண்டுகோள்

கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச்சாவடி முதல் எளாவூர் சோதனைச்சாவடி வரை, தமிழக பகுதிக்கு உட்பட்ட சாலையாகும்.

மேற்கண்ட சாலையின் பல பகுதிகளில், குறிப்பாக தாழ்வாக உள்ள இடங்களில், முறையாக மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், சிறு மழை பெய்தாலும், தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கி விடும்.

அந்த சமயங்களில், வாகன ஓட்டிகளும், பகுதி மக்களும் சிரமத்திற்கு ஆளாவது வழக்கம். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் கனமழையின் போது, திக்கு முக்காடி போவர்.

கடந்த சில தினங்களாக பெய்த சிறு மழைக்கு, தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில், உடனடியாக முறையான மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.