📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 24, 2026 07:02 PM

The Paradise Public Review

The Paradise Public Review

சென்னை: நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தி பாரடைஸ். இதில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். படம் இன்று வெளியாகியிருக்கும் சூழலில்; படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கு திரையுலகத்தின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் நானி. அவர் இப்போது தி பாரடைஸ் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் நானியின் கெட்டப்பே பலரிடம் கவனத்தை ஈர்த்த சூழலில்; இன்று படமானது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

பாரடைஸ் பப்ளிக் விமர்சனம்: படம் பார்த்த ரசிகை ஒருவர் பேசுகையில், "நானிக்காகத்தான் இந்தப் படத்துக்கு வந்தேன். நன்றாக இருந்தது. எனக்கு திருப்திதான். நிறைய பிட் சீன்கள் வருகின்றன. எனவே குழந்தைகளுக்கெல்லாம் அனுமதி இல்லை. இடைவேளை காட்சி அருமையாக இருந்தது. க்ளைமேக்ஸும் நன்றாக இருந்தது. நானியின் ரசிகையாக எனக்கு படம் ரொம்பவே பிடித்திருக்கிறது" என சொல்லிவிட்டு சென்றார்.

ரசிகரின் கருத்து: அவரைத் தொடர்ந்து பேசிய ரசிகர் ஒருவர், "இடைவேளை காட்சி நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக வந்த சீன்கள் சரியாக இல்லை. இடைவெளையில் பீக்கிற்கு சென்றது. அதற்கு பிறகும் சரியாக இல்லை. சொதப்பி வைத்துவிட்டார்கள். க்ளைமேக்ஸ் ஓரளவுக்கு இருக்கிறது. நானியும், அனிருத்தும்தான் படமே. மற்றபடி எதுவுமே இல்லை. கதையும், திரைக்கதையும் மொத்த வேஸ்ட். இனிமேல் ஒரு படத்தை சேப்டர் சேப்டராக கொடுப்பதை தயவு செய்து இயக்குநர்கள் நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

பார்க்க முடியாது: தெலுங்கு ரசிகர்களுக்கு இந்தப் படம் எப்படி என்று தெரியவில்லை.தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது. இரண்டாவது பாதி மொத்தம் மோசம். சாதாரண சினிமாதான் இது. இதில் வந்தது எல்லாம் இதற்கு முன்பு வந்த படங்களில் இருந்தது. நானி மட்டும்தான் சூப்பராக இருந்தார். குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்க முடியாது. ஏனெனில் வல்கரும், வயலன்ஸும் ரொம்பவே அதிகம்" என்றார்.

இன்னொரு ரசிகர் கருத்து: படம் டீசன்ட்டாகத்தான் இருந்தது. எதை எதிர்பார்த்து வந்தோமோ அது இருந்தது. தமிழ் ரசிகர்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பா.இரஞ்சித்தும், வெற்றிமாறனும் அதீத கமர்ஷியலாக படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. படத்தில் அனிருத்தான் பீக். நானிக்கு இது சூப்பரான படம்தான். இருப்பினும் படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். இந்த இயக்குநர் ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குநர். அடுத்ததாகவும் நானிதான் ஒடேலாவின் படத்தை தயாரிக்கிறார்" என்றார்.

எனக்கு திருப்தி இல்லை: இன்னொரு ரசிகர் பேசுகையில், "நானிக்கு எப்போதுமே ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு ஒர்த் இல்லை. சோஷியல் மீடியாவில் ஏற்றப்பட்ட ஹைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. நானியின் படங்கள் பார்க்கும்படி இருக்கும். இதில் வயலன்ஸ் எல்லாம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. அதெல்லாம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கதை சரியான வழியில் செல்லவில்லை என்றே தோன்றுகிறது. காதல் சீன்கள், அம்மா சென்ட்டிமென்ட் சீன்கள் எல்லாம் வேறு படங்களிலிருந்து எடுத்த மாதிரி இருக்கிறது" என்றார்.