📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health September 19, 2026 08:33 AM

 'டெங்கு காய்ச்சலை தடுப்பதில் த.வெ.க., அரசு அலட்சியம்'

 'டெங்கு காய்ச்சலை தடுப்பதில் த.வெ.க., அரசு அலட்சியம்'

சென்னை: 'டெங்கு காய்ச்சலை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்காத, த.வெ.க., அரசின் அலட்சியப்போக்கு, நிர்வாக சீர்கேட்டின் உச்சம்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலால், நுாற்றுக்கணக்கான மக்கள் தினமும் பாதிக்கப்படுவது, மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது.

நேற்று முன்தினம் மட்டும் 244 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால், தற்போது வரை, தமிழகத்தில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வித ஆக்கப்பூர்வமான நோய் தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத, த.வெ.க., அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. நடமாடும் மருத்துவ முகாம் நடத்தி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

மக்களை டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க, அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும், தமிழர் பாரம்பரிய மருந்துகளை போர்க்கால அடிப்படையில், மக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.