Politics
October 14, 2026 06:04 PM
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: 78 நாள் சம்பளம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- நமது டில்லி நிருபர் -
ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி பண்டிகைக்கு முன்பு ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இன்றைய கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலாவதாக ரயில்வேயில் பணியாற்றும் 11,40,770 ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்படும். இந்த போனஸ், இரவும், பகலும் அயராது உழைக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அமையும். நாம் குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடும்போது, இந்த ஊழியர்கள் ரயில்வே தண்டவாளங்கள், ரயில்கள், தொழிற்சாலைகளில் 24 மணி நேரமும் கடினமாக உழைக்கின்றனர். இதனால், அரசுக்கு 2,009 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
Politics