📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 18, 2026 12:01 PM

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு

92-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 'எலைட்', 'பிளேட்' என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 'பிளேட்' பிரிவில் 6 அணிகள் அங்கம் வகிக்கின் றன.

இதில் எலைட் குரூப்பில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளு டன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரி விலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

முன்னாள் சாம்பியனான தமிழக அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 42 முறை சாம்பியனான மும்பை, அரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ரெயில்வே, இமாசலபிரதேசம், சண்டிகார் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் 'டிரா' செய்தது. முதல் இன்னிங் சில் முன்னிலை பெற தவறியதால் ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. மும்பை (7 புள்ளி), அரியானா (6 புள்ளி) அணிகள் முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டன. டிரா கண்ட உத்தரகாண்ட், ராஜஸ்தான் அணிகள் தலா 3 புள்ளியும், ரெயில்வே ஒரு புள்ளியும் பெற்றுள்ளன. தோல்வி கண்ட இமாசலபிரதேசம், சண்டிகார் அணிகள் புள்ளி கணக்கை தொடங்க வில்லை.

இந்த நிலையில் 2-வது லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழக அணி, உத்தரகாண்டுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் சொதப்பிய தமிழக அணி, உத்தரகாண்டை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா ? என்று ரசிகர் கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழக அணியில் கேப்டன் சாய் கிஷோர், என்.ஜெகதீசன், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், பிரதோஷ் ரஞ்சன் பால், சோனு யாதவ் என சிறந்த வீரர்கள் உள்ளனர். குணால் சந்தேலா தலை மையிலான உத்தரகாண்ட் அணி தனது முதலாவது ஆட்டத்தில் ரெயில்வேயுடன் டிரா செய்திருந்தது.