Rasi Palan Today (03.10.2026): துலாம் ராசியினருக்கு இன்று வெற்றி.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்?
Rasi Palan Today (03.10.2026): துலாம் ராசியினருக்கு இன்று வெற்றி.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்? - இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Tamil Today (03.10.2026): புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான அக்டோபர் 3ம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை இங்கு காணலாம்.
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையான அக்டோபர் 3ம் தேதியான இன்று 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம். இன்று காலையில் அஷ்டமி, அதன்பிறகு தேய்பிறை ஸப்தமி திதி வருகிறது.
இன்றைய ராசிபலன்கள் (அக்டோபர் 3)
இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செல்லவும்.
அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உருவாகும். தனவரவு மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உருவாகும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு வரவுகள் மேம்படும்.
எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். தம்பதிகளிடம் அனுசரித்துச் செல்லவும். ரகசியமான சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும்.
கலை நுட்பமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழிலில் மேன்மையும் பாராட்டையும் பெறுவீர்கள். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். மறுதாரம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பொறுப்புகள் மூலம் மதிப்புகள் மேம்படும்.
முன்கோபம் இன்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான சிறு தூரப் பயணங்கள் செல்வீர்கள். சமூக தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எழுத்து துறைகளில் சில சாதகமற்ற சூழல் உண்டாகும்.
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி ஏற்படும்.
விருச்சிகம்
தன வரவில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும்.
உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்தேக உணர்வுகள் எதுவும் இன்றி தீரவிசாரித்து முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளிகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் அவசியமாகும். உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் விருப்பங்கள் உருவாகும்.
குழந்தைகளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும்.
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைக்கூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி