📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 08:33 AM

 பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்

 பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்

சென்னை: இடைத்தேர்தல் நடக்க உள்ள, இரு தொகுதிகளில், தலா மூன்று நாட்கள் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார்.

அ.தி.மு.க., வெளியிட்ட அறிவிப்பு: இடைத்தேர்தலில், வரும் 24ம் தேதி முதல் அக்., 3 வரை, பழனிசாமி பிரசாரம் செய்கிறார். அதன்படி, செப்., 24, 25, அக்., 3 ஆகிய மூன்று நாட்கள், மதுராந்தகத்தில் பிரசாரம் செய்வார். தாராபுரத்தில், செப்., 27, 28, அக்., 2 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்வார்.

பழனிசாமி பிரசாரம் செய்யும் வழித்தடங்கள் குறித்து, விரைவில் வெளியிடப்படும். பயண ஏற்பாடுகளை, அந்தந்த தொகுதிகளின் கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.