📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 07, 2026 04:03 AM

புதிய கட்சியை தொடங்கும் தனுஷ்: தேர்தல் ஆணையத்தில் பதிவு; என்ன பெயர் தெரியுமா..?

புதிய கட்சியை தொடங்கும் தனுஷ்: தேர்தல் ஆணையத்தில் பதிவு; என்ன பெயர் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில், தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் வலுப்படுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமிழக எழுச்சிக் கழகம்

தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மன்ற நிர்வாகிகளையும் தனுஷ் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

திராவிட கட்சிகள்

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2 திராவிட கட்சிகளின் செல்வாக்கு ஓரளவு சரிந்து விட்டது. கட்சி தொடங்கிய 2 வருடத்திலேயே விஜய் முதல்-அமைச்சர் ஆனார். இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் உள்ள பிற நடிகர்களை அரசியலுக்கு வர தூண்டியுள்ளது. அந்த வகையில் தனுஷ், சிவகார்த்திகேயன், ரவி மோகன் போன்றோர் அரசியலுக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் நடிகர் தனுஷ், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

நலத்திட்ட உதவிகள்

அந்நிகழ்வில் "இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்கு பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம். என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி" என பேசியிருந்தார்.

சினிமா வட்டாரங்கள்