📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 10, 2026 10:04 PM

போஸ்ட் ஆபிஸ் NSC திட்டம் : ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டியுடன் எவ்வளவு கிடைக்கும் ? முழு கணக்கீடு

போஸ்ட் ஆபிஸ் NSC திட்டம் : ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் வட்டியுடன் எவ்வளவு கிடைக்கும் ? முழு கணக்கீடு

பாதுகாப்பான மற்றும் லாபகரமான நடுத்தர குடும்பங்களுக்கு மிகவும் ஏற்ற சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் போஸ்ட் ஆபிஸ் NSC (National Savings Certificate ) திட்டமாகும். பங்குசந்தை முதலீட்டில் இருக்கும் அபாயங்களை விரும்பாதவர்கள், தாங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும் அதே சமயம் நிலையான வருமானத்தை தர வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வு தான் இந்த NSC சேமிப்பு திட்டமாகும். மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு 7.7% வட்டி விகிதம் கிடைக்கின்றது. இந்த வட்டி என்பது ஆண்டிற்கு ஒருமுறை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறதுஇந்நிலையில் போஸ்ட் ஆபிஸ் NSC திட்டத்தில் 4.5 லட்சம் ரூபாய்யை ஒரே தவணையாக முதலீடு செய்யும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகளில் நமக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் ? அதற்கான வட்டி எவ்வளவு ? என்பதற்கான கணக்கீட்டை பார்க்கலாம்4.5 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கான கணக்கீடுபோஸ்ட் ஆபிஸ் NSC திட்டத்தில் வட்டி என்பது ஆண்டிற்கு ஒருமுறை கூட்டு வட்டியாக கணக்கிடப்பட்டாலும் ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகே அந்த வட்டி தொகை கிடைக்கும்அசல் தொகை -4.5 லட்சம் ரூபாய்வட்டி விகிதசம் -ஆண்டுக்கு 7.7%கால அளவு -ஐந்து ஆண்டுகள்மொத்த வட்டி -2,02,072 ரூபாய்மொத்த முதிர்வு தொகை -6,52,072 ரூபாய்வரி விலக்கு நன்மைபோஸ்ட் ஆபிஸ் NSC திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாம் வரி விலக்கு நன்மையை பெற முடியும்NSC யில் நாம் முதலீடு செய்யும் 4.5 லட்சத்தில் 1.5 லட்சம் வரையிலான அசலுக்கு ஒவ்வொரு நிதியாண்டும் வரி விலக்கு பெற முடியும்NSC திட்டத்தில் முதல் 4 ஆண்டுகளில் ஈட்டப்படும் வட்டி மீண்டும் தானாக முதலீடு செய்யப்படுவதாக கருதப்படுகின்றது. எனவே இந்த வட்டி தொகைக்கு கூடுதல் வரி விலக்கு பெற முடியும்NSC யின் முக்கிய நன்மைகள்இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லைமத்திய அரசின் 100 % உத்தரவாதம் பெற்ற திட்டம்NSC பாத்திரம் மீது கடன் பெரும் வசதி உண்டு