📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 06:03 AM

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியபாளையத்தில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தவெக அரசு அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தை கடந்த 2ம்தேதி முதல் தொடங்கியது. இதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பெரியபாளையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியபாளையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர்கள் கோபி, மன்சூரலி, சுனில் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக கம்யூனிஸ்ட் வட்ட குழு தலைவர் அருள், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் வேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகம் முழுவதும் இலவச பேருந்துகளை இயக்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வை அழிக்கும் இலவச பேருந்து திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஒன்றிய அரசு, மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்ததால் பாதிக்கப்படுகிறோம். தவெக அரசு வரும் 31ம் தேதிக்குள் இலவச பேருந்து பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவோம் என வலியுறுத்தினர். இதில், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், கன்னிகைப்பேர், வடமதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.