📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 30, 2026 09:02 PM

மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும் ’டோரதி’

மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும் ’டோரதி’

மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும் ’டோரதி’ - தமிழில் திருநங்கைகள் குறித்து வெளியான திரைப்படங்கள் ஒரு மீள்பார்வை

தமிழ் சினிமாவில் வெளியான காஞ்சனா, சூப்பர் டீலக்ஸ், பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்கள் பாலின சர்ச்சை குறித்தும், திருநங்கைகளை மையக்கதையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

Published : September 29, 2026 at 4:51 PM IST

சென்னை: தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சினிமா ஊடகம் சமூகத்தில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில திரைப்படங்கள் தனி நபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தவும் செய்கிறது. அந்த வகையில் ஒரு சில படங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் நகைச்சுவையாகவும், தவறாகவும் சித்தரிக்கப்படவும் செய்கின்றனர்.

அதே நேரத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களின் வாழ்க்கை முறை குறித்தும் பேசும் திரைப்படங்களும் அவ்வபோது வெளிவர தான் செய்கின்றன. சமீபத்தில் வெளியான 'டோரதி' திரைப்படம் இதுவரை பேசப்படாத பாலின ரீதியான கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியானது முதல் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் மூன்றாம் பாலினத்தவர்களை மையமாக கொண்டு உருவான திரைப்படங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த திரைப்படம் காஞ்சனா. மேலும் இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தில் கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தான் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் தனது குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் சரத்குமார் பின்னர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரால் வளர்க்கப்படுகிறார். அதன் பிறகு அவர் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு காஞ்சனா திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் திருநங்கை போன்று தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி சரத்குமார் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். முனி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான காஞ்சனா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, காயத்ரி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். திருநங்கைகள் சமூகத்திலும், குடும்பத்திலும் நடத்தப்படும் விதம் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டது.

மேலும் பாலின சமத்துவமின்மை குறித்தும், திருநங்கைகள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கைகளுக்கு உரிய உடல்மொழி, முகபாவனை, பேசும் விதம் ஆகியவற்றை எதார்த்தமான முறையில் வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பேரன்பு. இந்த திரைப்படம் பாலின பாகுபாடு மற்றும் திருநங்கைகள் குறித்தும், தந்தை, மகளை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டும் உருவாக்கப்பட்டது. மாற்றத்திறனாளி என்பதை காரணம்காட்டி தாய் விலகும் நிலையில் சமூக புறக்கணிப்பிற்கு மத்தியில் தனது மகளை வளர்க்கிறார் மம்மூட்டி.

இந்த படத்தில் முதல்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நிஜ திருநங்கையான அஞ்சலி அமீர் நடித்திருந்தது சிறப்பம்சம் ஆகும். இந்த படத்தில் மாற்றுத்திறனாளி பாலின உறவு குறித்தும், திருநங்கைகளின் பிரச்சனைகள் குறித்தும் உரத்த குரலில் பேசப்பட்டிருக்கும். இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் பாராட்டை பெற்ற நிலையில், விமர்சன ரீதியாகவும் திரையரங்குகளில் கைதட்டல்களை பெற்றது. மேலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

பாவக் கதைகள்

அதன் பிறகு அவர்கள் சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்களா என்பதை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. சிறிய படம் என்றாலும் திருநங்கைகள் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றன. காளிதாஸ் ஜெயராம் திருநங்கைகள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த ஆந்தாலஜி கதை விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது.

பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படம் சிகை. இப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடித்துள்ளார். இந்த படத்தில் திருநங்கையான கதிர் சமூகத்தில் எதிர்கொள்ளும் புறக்கணிப்பு மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த படத்தில் திருநங்கைகள் காட்சிப்படுத்தப்பட்ட விதத்திற்கு திருநங்கைகளே எதிர்ப்பு குரலை எழுப்பினர். அதாவது திருநங்கைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. ZEE5 ஓடிடி தளத்தில் வெளியான சிகை திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டோரதி. இப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத பாலின ரீதியான அடையாளங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை மையக்கருவாக கொண்டுள்ளது. இப்படத்தை திரைத்துறையினர் மற்றும் பார்வையாளர்கள் ஒரு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் எதிர்மறை விமர்சனத்தையும் வைத்து வருகின்றனர்.