📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 04:33 PM

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் - வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Published : September 19, 2026 at 3:30 PM IST

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளிலும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

அதன்படி, மதுராந்தகம் சட்டப் பேரவை தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 22 பேர் என மொத்தம் 27 பேர் போட்டியிடுகின்றனர்.

தாராபுரத்தில் 22 பேர் போட்டி

தாராபுரம் சட்டப் பேரவை தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேரையும் சேர்த்து மொத்தம் 22 பேர் களத்தில் உள்ளனர்.