📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 17, 2026 11:31 AM

Mandaadi Day 7 Box Office

Mandaadi Day 7 Box Office

சென்னை: சூரி நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான மண்டாடி திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மதிமாறனின் இயக்கம், சூரியின் அசத்தலான நடிப்பு, ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை என அத்தனையும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விடுதலை படத்திலிருந்து கதையின் நாயகனாக அறிமுகமான சூரி; அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை தரமாக வெளிப்படுத்தினார். அதன் காரணமாக அவர் லீடு ரோலில் நடிக்கும் படங்கள் ஒன்று விமர்சன ரீதியாக மதிப்பை பெற்றன அல்லது வசூல் ரீதியாக கெத்து காண்பிக்கின்றன. மாமன் படம் மோசமான விமர்சனத்தை சந்தித்தாலும் அதன் வசூல் சூரியின் மார்க்கெட் உயரப்போவதற்கான அறிகுறிகளைத்தான் காண்பித்தது. இப்போது மண்டாடி படத்தில் நடித்திருக்கிறார்.

மண்டாடி படத்தில் சூரி: இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார். இதில் சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பாய்மர படகு போட்டியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மொத்தம் ஐந்து மொழிகளில் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் கோலாகலமாக வெளியானது படம்.

மண்டாடியும் சூப்பர்: இதுவரை பேசப்படாத பாய்மர படகு போட்டியை வைத்து இயக்குநர் புகுந்து விளையாடியிருக்கிறார். படத்தின் முதல் சீனிலிருந்து இறுதி சீன்வரை பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. தன்னால் முடிந்த அளவுக்கு ரசிகர்களுடன் படத்தை கனெக்ட் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்த அனைவருமே மதிமாறனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் ஆரூடம் கூறியிருக்கிறார்கள். இவர் வெற்றிமாறனின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி செம மாஸ்: இந்தப் படத்தின் ஹைலைட்டுகளில் முக்கியமானது சூரியின் நடிப்பு. மனிதர் பிரித்து மேய்ந்துவிட்டார். இறுக்கமான முகம், உடல்மொழியுடன் அவர் வருவதை பார்க்கையில்; ரசிகர்களுக்குள் இயல்பாகவே ஒரு படபடப்பு ஏற்படுவதே அவரது நடிப்புக்கு கிடைத்த முதல் வெற்றி. சண்டை காட்சிகள், எமோஷன், ரொமான்ஸ் காட்சிகள் என அத்தனை ஏரியாக்களிலும் ரகளையாக ஸ்கோர் செய்துவிட்டார். க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் எல்லாம் உயிரை பணையம் வைத்து அவர் நடித்திருப்பது தெரிகிறது.

இந்தப் படத்தில் அவரது மாஸ் எலிவேஷனை பார்த்த பல இயக்குநர்கள் இனிமேல் சூரிக்காக அதிகம் கதை எழுதுவார்கள் என்றே தெரிகிறது. இன்னும் சில வருடங்களில் கண்டிப்பாக அவர் பெரிய வியாபாரம் நடக்கக்கூடிய கமர்ஷியல் ஹீரோவாக நிலைத்து நிற்பார் என்பது மட்டும் உறுதி. இப்படி படம் விமர்சன ரீதியாக அனைவராலுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மண்டாடி வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, ரிலீஸான ஏழாவது நாளான நேற்று அந்தப் படம் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். தமிழில் இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாயையும், தெலுங்கில் 70 லட்சம் ரூபாயையும் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் ஏழு நாட்களில் அப்படம் 54 கோடியே 5 லட்சம் ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் தரமான செய்கையை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.