📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 15, 2026 09:33 AM

Mandaadi Day 5 Box Office

Mandaadi Day 5 Box Office

சென்னை: சூரி ஹீரோவாக நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அனைவருமே சூரியின் நடிப்பை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம்; வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காமெடியனாக இருந்த சூரி விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அந்த பாதையிலேயே பயணிக்கிறார். அது அவருக்கு ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது. இப்போது அவர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

எப்படி இருந்தது ரெஸ்பான்ஸ்?: படமானது மொத்தம் ஐந்து மொழிகளில் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. சூரிக்கென உருவாகியிருக்கும் ரசிகர்களும், ரசிகைகளும் முதல் நாளில் தியேட்டரை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஸ்க்ரீனில் சூரி தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் விசில் சத்தம் விண்ணை பிளந்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கான மாஸ் எலிமென்ட்ஸ் படத்தில் அதிகம் இருந்தன. அதை சரியாகவும் ப்ரெசன்ட் செய்திருந்தார்கள். இந்தப் படத்துக்கு பிறகு சூரியின் மார்க்கெட் மேற்கொண்டு உயரும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. நிச்சயம் மற்ற ஹீரோக்கள் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டார்.

இயக்குநருக்கும் எதிர்காலம் உண்டு: அதேபோல் படத்தின் இயக்குநர் மதிமாறனும் சூப்பராக ஸ்கோர் செய்திருக்கிறார். ஹீரோவுக்கு எப்படி பில்ட் அப் ஏற்ற வேண்டும், அந்த பில்ட் அப்பை எப்படி ரசிகர்களிடம் கனெக்ட் செய்ய வேண்டும் என்ற விஷயத்தில் கைத்தட்டல்களை அள்ளிவிட்டார். அதேபோல் பாய்மர படகு போட்டி என்ற தீமை தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகவும், தெளிவாகவும் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பதையும் பாராட்டத்தான் வேண்டும்.

வெற்றிமாறன் மாதிரியே: இவர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மட்டுமில்லை உறவினரும்கூட. அவர் பட்டறையிலிருந்து வந்ததால் படத்தில் கமர்ஷியல் டச் மற்றும் நல்ல கருத்துக்களையும் வெற்றி ஸ்டைலிலேயே டெலிவர் செய்திருக்கிறார். இப்படி எல்லா ஏரியாக்களிலும் படம் நல்ல பெயர் பெற்றிருப்பதால் வசூலும் சூப்பராக வந்துகொண்டிருக்கிறது.

மண்டாடி 5வது நாள் வசூல்: இந்நிலையில் Sacnilk இணையதளம் மண்டாடி திரைப்படம் ஐந்தாவது நாளான நேற்று எவ்வளவு வசூலித்தது என்ற தரவுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அதன்படி, நேற்று இப்படம் மொத்தம் 11 கோடியே 25 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம். முந்தைய நாளைவிட இந்த வசூல் கொஞ்சமே கொஞ்சம்தான் குறைவு என்றாலும்; சூரி மார்க்கெட்டுக்கு இந்த வசூல் இமாலய அளவுதான். மொத்தம் அந்தப் படம் ஐந்து நாட்களில் 45 கோடியே 85 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது.