📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 13, 2026 08:37 PM

மைதானத்தில் ஒலித்த 'வந்தே மாதரம்'.. சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக இந்திய அணி செய்த மாற்றம்

மைதானத்தில் ஒலித்த 'வந்தே மாதரம்'.. சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக இந்திய அணி செய்த மாற்றம்

மைதானத்தில் ஒலித்த 'வந்தே மாதரம்'.. சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக இந்திய அணி செய்த மாற்றம்

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன' இசைக்கப்படுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் மைதானத்தில் பாடப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது.

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், தேசியப் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம் என நாடாளுமன்றத்தில் அண்மையில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் மைதானத்தில் முழுமையாகப் பாடப்பட்டன.

இனி அனைத்து சர்வதேச போட்டிகளுக்கு முன்பும் இந்திய அணி சார்பில் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் சேர்த்து இசைக்கப்படுமா? அல்லது இது ஒருநாள் நிகழ்வா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வந்தே மாதரம் பாடப்பட்டது குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.

இந்த நிகழ்வை அடுத்து தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் விளையாடும் அணிக்குள் திரும்பி உள்ளார். பும்ராவின் வருகை அணிக்கு மிகப்பெரிய பலம் என்று கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் குறிப்பிட்டார்.

துவக்க வீரராக 15 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக அனுபவ வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

ஆப்கானிஸ்தான் அணி: இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், தர்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல்ஹக் பரூக்கி.