📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 08:33 AM

மாணவன் ஆணவக்கொலை சர்ச்சை மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை: தரதரவென இழுத்துச் சென்று போராட்டகாரர்கள் கைது

மாணவன் ஆணவக்கொலை சர்ச்சை மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை: தரதரவென இழுத்துச் சென்று போராட்டகாரர்கள் கைது

மாணவன் ஆணவக்கொலை சர்ச்சை மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை: தரதரவென இழுத்துச் சென்று போராட்டகாரர்கள் கைது

மதுரை: மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன், சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள குளத்தின் முட்புதர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் சந்தேக மரணமாக வழக்கை பதிவு செய்தனர். பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 11 நாட்களாக மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மாணவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றதாக அவரது நண்பர் மாணவரின் தாயாரிடம் பேசும் ஆடியோவும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர் மரண வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்,

விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தபோது, அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவில் ஏறி குதித்து, முதல் மாடியில் உள்ள அலுவலக அறைக்கு சென்றனர்.

அங்கு கலெக்டர் இல்லாத நிலையில், தரைத்தளத்தில் கலெக்டர் அலுவலக வராண்டாவில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.