Lust Stories 3 Review: ராதிகா ஆப்தே ஸ்வாப்பிங் முதல் சித்தார்த் சேட்டை வரை.. லஸ்ட் ஸ்டோரீஸ் 3 விமர்சனம்!
சென்னை: இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ள படங்களை விட ஓடிடியில் ஏகப்பட்ட ஐட்டங்கள் ரசிகர்களை கவர காத்திருக்கின்றன. இந்த வார வீக்கெண்டை மஜா பண்ண நெட்பிளிக்ஸ் தனது காம அஸ்திரமான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியின் 3வது சீச்சனை இறக்கி உள்ளது.
ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தமன்னாவின் எக்ஸ் காதலர் விஜய் வர்மா உள்ளிட்டோர் இந்த முறையும் சேர்ந்து நடித்துள்ளனர்.
புதிதாக 2வது திருமணம் செய்துக் கொண்ட நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தங்களது ஃபர்ட் நைட் வீடியோவையே ஷூட் பண்ணிக்கோங்க என நடித்தது போல லஸ்ட் ஸ்டோரீஸ் 3ல் பிட்டு படத்தை ஓட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் விமர்சனம்: வெளிநாடு வெப்சீரிஸ்களில் ஏகப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் உடலுறவு காட்சிகளும் அதிகளவில் உள்ள நிலையில், அதற்கு போட்டியாக நிர்வாணக் காட்சிகளை மட்டும் தவிர்த்துவிட்டு ஆனால், ஆபாசமான அந்தரங்க காட்சிகளை அதிகம் வைத்து பெண்களுக்கும், ஆண்களுக்கும் இடையே இருக்கும் காம உணர்ச்சிகளை பற்றி விரிவாக பேசும் கதைகளாக இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் படங்கள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே வெளியான 2 பாகங்களும் ஹிட் அடித்த நிலையில், 3வது பாகத்தை இறக்கியுள்ளது நெட்பிளிக்ஸ். இந்த சீசன் 3லும் மொத்தம் 4 கதைகள், ஒவ்வொரு கதைகளையும் ஒவ்வொரு பிரபல இயக்குநர்கள் இயக்கி உள்ளனர்.
கணவரை ஸ்வாப் செய்யும் ராதிகா ஆப்தே: ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் ராதிகா ஆப்தே போட்ட பலான ஆட்டங்களை பார்த்த ரசிகர்களுக்கு அம்மாவான பிறகு இந்த வயசுல இவர் எல்லாம் என்ன பண்ணப் போறாரு என நினைத்த ரசிகர்களுக்கு தமன்னாவின் எக்ஸ் லவ்வரான விஜய் வர்மாவின் மனைவியாக இந்த சீசன் 3ல் நடித்து மிரட்டி விட்டார்.
ராதிகா ஆப்தே தனது கணவர் விஜய் வர்மா தன்னை கண்டுக்கொள்ளாமல் போனை நோண்டிக் கொண்டிருக்கிறார் என்கிற வருத்தம். அவரது தோழி கொங்கனா சர்மா அவரது கணவர் கம்ப்யூட்டர் வேலையில் பிசியாகி இருப்பதால் அப்செட் ஆகிறார். கொரியன் வெப்சீரிஸ்களின் தாக்கம் காரணமாக இருவரும் தங்களது கணவன்மார்களை மாற்றிக்கொண்டு உடல் உறவு வைத்துக் கொண்டு உல்லாசமாக இருக்க போடும் பிளான் கடைசியில் என்ன ஆனது என்பது தான் முதல் கதையே.
விஜய் வர்மா உடன் ராதிகா ஆப்தே ஆம்புலன்ஸில் உடலுறவுக்கொள்ளும் காட்சிகள் எல்லாம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 40 வயதை கடந்து விட்ட பெண்களுக்கு இருக்கும் பாலியல் இச்சைக் குறித்த கதையை தாறுமாறாக இயக்கி இந்த மொத்த ஆந்தாலஜியும் பார்க்க வைத்து விடுகிறார் இயக்குநர் விக்ராந்த் மோத்வானே.
ட்வின்ஸ் ட்விஸ்ட்: அமீர்கானின் 2வது மனைவியான கிரண் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 2வது கதையில் பிட்சா டெலிவரி பாய்க்கும் நகங்களை சுத்தப்படுத்தும் பார்லர் பெண்ணுக்கும் இடையே காதல், காமம் பற்றிக் கொள்கிறது. ஆனால், திடீரென வரும் ட்வின்ஸ் ட்விஸ்ட், அதன் பிறகு வரும் டிரக்ஸ் பிரச்னை என காமத்தை தாண்டி கதையில் நல்ல விறுவிறுப்பைக் கொடுத்து கடைசியில் ஒரு மங்காத்தா ட்விஸ்ட்டை வைத்து மாஸ் காட்டியுள்ளார் கிரண் ராவ்.
விவாகரத்து பஞ்சாயத்து: ஷாகுன் பத்ரா இயக்கத்தில் அலி ஃபசல், ராதிக மதனின் கதை 3வதாக வருகிறது. கோலாகலமாக திருமணம் செய்வதும், அதன் பின்னர் 2 ஆண்டுகளில் விவாகரத்து செய்து பிரிவதாகவும் ஆரம்பிக்கும் கதையில், இவர்களுக்கு இடையே என்ன பிரச்னை, உடலுறவு இவர்களுக்கு மருந்தாக இருந்ததா? அல்லது தீர்வாக இருந்ததா? என்பது தான் இந்த கதை.
கடைசியாத்தான் வந்தாரு சித்தார்த்: இந்தியன் 2 படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன சித்தார்த் இந்தியில் தொடர்ந்து வெப்சீரிஸ்களிலும், ஓடிடி படைப்புகளிலும் வெயிட்டு காட்டி வருகிறார். தனது மனைவி அதிதி ராவ் உடன் இணைந்து ரொம்பவே இன்டிமேஸியாக இவர் நடித்துள்ள 4வது கதையை விஷால் பரத்வாஜ் காதல் காவியமாகவே வடித்துள்ளார். சித்தார்த் இப்படியெல்லாம் நடிப்பாரா? என அவரது பிட்டு சீன்களை சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வரும் அளவுக்கு இந்த 4வது கதை இளைஞர்களை கவர்ந்துள்ளது. மொத்தமாக இந்த லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 3 இளைஞர்கள் மத்தியிலும் வயதான தம்பதியினர்கள் மத்தியிலும் பாஸ் ஆகிவிடும். தமிழ் டப்பிங்கும் வழக்கம் போலவே கச்சிதமாக அமைந்துள்ளது. அடல்ட் ஆந்தாலஜி என்பதால் கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.