📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 28, 2026 02:03 PM

குரூப் 1 தேர்வில் 25% பேர் ஆப்சென்ட்; சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல்

குரூப் 1 தேர்வில் 25% பேர் ஆப்சென்ட்; சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தகவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வை, 74.22 சதவீதம் பேர் எழுதினர். 25% பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சப் - கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், மாவட்ட பதிவாளர் என, 'குரூப் 1' பதவிகளில், 46 பணியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த ஜூன், 23ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வுக்கு, 2 லட்சத்து 23,440 பேர் விண்ணப்பித்தனர்.தமிழகம் முழுதும், 'குரூப் 1' முதல் நிலைத்தேர்வு நடந்தது. காலை, 09:30 முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்க, 2 லட்சத்து 23,440 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில், 74.22 சதவீதமான, 1 லட்சத்து 65,828 பேர் பங்கேற்றனர்; 25.78 சதவீதமான, 57,612 பேர் பங்கேற்கவில்லை. தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.