📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 03, 2026 03:04 PM

கிருஷ்ண ஜெயந்தி: பாதக் கோலம் மற்றும் உறியடி திருவிழா ரகசியம்

கிருஷ்ண ஜெயந்தி: பாதக் கோலம் மற்றும் உறியடி திருவிழா ரகசியம்

கண்ணன் பிறந்த கோகிலாஷ்டமி அன்று வீட்டில் வாசல் கோலத்தில் ஆரம்பித்து பூஜை அறை வரை கண்ணனின் குட்டி குட்டி பாதங்கள் போடுவோம். அந்த குட்டி குட்டி பாதங்கள் மாவால் போடலாம். அப்படி குட்டி குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை வீட்டிற்குள் வரவைப்பதன் தாத்பரியம், சின்ன கண்ணன் குறும்பு க்காரன்.

அவன் அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெய் திருடும்போது வெண்ணெய் கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்துவிடும். வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும் இதை வைத்து கண்ணன் திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்கள் கோகுல பெண்கள்.

இருப்பினும் கோபப்பட மாட்டார்கள் கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டில் பசுக்கள் நிறைய பால் தரும் செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த தாத்பரியத்திற்காகவே நாமும் வெண்ணையினால் கண்ணன் பாதங்களை வரைந்தோ மாக்கோலத்தால் கண்ணன் பாதம் போட்டு செல்ல கண்ணன் குட்டி கண்ணனை வரவழைத்து அவனின் பேரருளை பெற்று குபேர அருளைப் பெறுகிறோம்.

உறியடி விழா ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா?

தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணனுக்கு வெண்ணைய் மீது அலாதி பிரியமுண்டு. அதனால் வீட்டில் எங்கே வெண்ணெய் வைத்திருந்தாலும் தேடிப்பிடித்து எடுத்து தின்றுவிடுவார். பக்கத்து வீடுகளிலும் இதேபோல் அவர் கைவரிசை காட்டி வெண்ணெய் திருடி தின்பது உண்டு.

அதனால் தாயிடம் செல்லமாக அடியும் வாங்குவார். சிறுவயதில் கண்ணன் செய்த இதுபோன்ற அழகான சேட்டைகளை பிரதிபலிக்கும் விதமாக கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடி திருவிழாவை நடத்துகிறார்கள். உறியடி விழாவில் இளைஞர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். இந்த விளையாட்டில் ஒரு வளையத்தில் சுழலும் வகையில் ஒரு பானையை கயிற்றில் கட்டி தொங்கவிடுவார்கள். அந்தப் பானைக்குள் பரிசுப்பொருள் வைத்திருப்பார்கள். இல்லை என்றால் மஞ்சள் கலந்த நீரால் நிரப்பி இருப்பார்கள்.

போட்டியில் பங்கேற்கும் இளைஞர்களிடம் கம்பை கொடுத்து விடுவார்கள். அந்த கம்பை பயன்படுத்தி அவர்கள் பானையை உடைக்கவேண்டும். ஆனால் பானையை எளிதாக உடைத்துவிட முடியாது. ஒவ்வொருவராக ஓடிவந்து பானையை உடைக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு பானையை அடிக்க கம்பை ஓங்கும்போது பானையை மேல் நோக்கி கீழ்நோக்கி என்று ஒருவர் கயிற்றால் இழுத்துக்கொண்டே இருப்பார்கள்.

இன்னும் சிலர் பானையை உடைக்க வருபவர் மீதும் மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் குறி தவறி பானையை எளிதில் உடைக்க முடியாமல் போய்விடும் இவ்வாறு உடைக்க முடியாதபட்சத்தில் குறிப்பிட்ட உயரத்தில் பானையை நிலை நிறுத்தி கட்டிவிடுவார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி பானையை உடைப்பார்கள். பானை உடைக்கும் இளைஞர்கள் குழுவுக்கு பரிசுகள் வழங்கப்படும். உரியடி விழா ஒரு கலகலப்பான விழாவாக ஒவ்வொரு கிருஷ்ணர் கோவில்களிலும் நடத்தப்படும். இவ்வாறு நம்மூரில் உறியடித் திருவிழா விழா நடைபெறும்.

ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் பூனாவில் இது டாஹி ஹான்றி என்ற பெயரில் உறியடி விழா நடத்தப்படுகிறது. நாம் கம்பால் எட்டி அடிக்கும் உயரத்தில் கட்டி தொங்க வைத்திருப்போம். ஆனால் இவர்கள் ஊரில் இதே பானை மிக உயரமான இடத்தில் கட்டப்பட்டிருக்கும். ஆண்கள் ஒருவர் மீது ஒருவர் பிரமிடு போல ஏறி உயரத்தில் மோருடன் கட்டப்பட்டிருக்கும் அந்த மண்பானையை உடைப்பார். பானை உடைக்கப் படும்பொழுது அந்த மோர் அந்த குழுவினர் அத்தனை பேர் மீதும் விழுந்துவிடும்.

இந்த நிகழ்வு குழந்தை மாயக்கண்ணனின் சிறுவயதில் வெண்ணை திருடி உண்பதை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் கோவிந்தா அல்லது கோவிந்தா பாதக் என்ற பெயரால் அழைக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்வில் கிடைக்கும் பரிசு தொகைக்காகவே போட்டி போடுபவர்கள் அதிகம். இந்த குழுவினர் மண்டல் என்ற பெயரில் அழைக்கப் படுகின்றனர். இவர்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றித்திரிந்து இதுபோன்ற பானைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடைத்து வெற்றி வாகை சூடுவார்கள்.

ஸ்ரீ கோகுலாஷ்டமி அன்று இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. நமது கலை கலாச்சாரம் அழியாமல் உயிரோட்டத்துடன் இருந்து இளைய தலைமுறையினர் பண்டிகைகளை மகிழ்ச்சியோடு கொண்டாடி பங்கு பெற்று கொண்டாடவே பண்டிகைகள்.

இந்தத் தொகுப்பின் மூலம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள ஆழ்ந்த ஆன்மீகத் தாத்பரியங்கள், பாரம்பரிய சடங்குகளின் நன்மைகள் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த ஆண்டின் பண்டிகையை மேலும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தெளிவைப் பெறலாம்.