📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 07, 2026 12:03 PM

ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிவு தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது: கனிமொழி எம்பி கண்டனம்

ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிவு தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது: கனிமொழி எம்பி கண்டனம்

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவு: ஜி.எஸ்.டி. மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதியிழப்பை தொடர்ந்து சுட்டிக்காட்டி, அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது திமுக. ஆனால், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 5% குறைந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாட தேவைகளுக்குக்கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம்தான் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது. நாடு முழுவதும் சில பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. வரிக் குறைப்பை தன்னுடைய சாதனையாக தவெக அரசு மார்தட்டிக்கொள்வது அபத்தமானது. தமிழ்நாட்டில் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.