📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 11:03 AM

“ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக அளவுக்கு மீறி எதிர்வினை...”

“ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக அளவுக்கு மீறி எதிர்வினை...”

அமைச்சர் நிர்மல் குமார்

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீதான குற்றச்சாட்டுகள் பற்றி திமுகவின் முன்னாள் ரகுபதி பேட்டி அளித்தபோது அதிகப்படியான எதிர்வினை காட்டினார். ‘ஜெம்’ வீரமணி விவகாரத்தில் திமுக ஏன் இப்படி அளவுக்கு மீறி எதிர்வினை ஆற்றுகிறது? ஏதோ பெரிய தவறை மறைப்பதற்குதான் இதை செய்கின்றனர். இதுவரை முன்னாள் அமைச்சர்கள் 7 செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.

ரகுபதி தனது பேட்டியில், வீரமணி சம்பந்தப்பட்ட வீடியோ தெளிவில்லாமல் இருந்ததாகவும், அதுபோதுமான ஆதாரம் இல்லை என்பதால் ஆதாரம் வந்த பிறகு விசாரணையை தொடர்கிறோம் என்று அப்போது கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் பார்த்தாரா அல்லது பார்த்தவர்கள் யாரும் அவரிடம் கூறினார்களா? அதற்கு ரகுபதி பதில் சொல்ல வேண்டும். இதற்கு பெயர்தான் வழக்கை மூடும் செயல். அவர்கள் விசாரணையை தொடர்ந்து நடத்தி இருக்க வேண்டும்.

திமுக ஆட்சியில், முடிவெடுக்கக் கூடிய அதிகார மையத்தை அணுகி பிரச்சினையை முடித்து தப்பித்திருக்கின்றனர். அதற்கான விலை எவ்வளவு? ஐந்து மாதங்களாக இந்த வழக்கு கிடப்பில் இருந்துள்ளது. சிசிடிவியை பார்த்துள்ளனர். அதில் குழந்தைகள் இருந்துள்ளனர். இப்போதும் வீரமணியை காப்பாற்றும் விஷயத்தைதான் ரகுபதி செய்துள்ளார். இந்த ஆட்சியில்தான் முறையான விசாரணை நடைபெறுகிறது. தலைமறைவாக இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வழக்கு முதல்வர் விஜய்யின் தனி கவனத்தில் உள்ளது. எந்த குற்றவாளியும் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அந்த வழக்கில் திமுக ஆட்சியில் எஃப்ஐஆர் போடப்பட்டது. ஆனால், அப்படி போட்டுவிட்டு பின்னர் பேரம் பேசி வழக்கை மூடுவதுதான் அவர்களின் தந்திரம்.

இப்போது சம்பந்தப்பட்ட அனைவரையும், எந்தவித ஆதாரத்தையும் யாரும் அழித்துவிடாத அளவுக்கு துரிதமாக விசாரணை நடைபெற்று வருகிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. ‘ஜெம்’ வீரமணியை யார் காப்பாற்ற நினைத்திருந்தாலும், அவர்களையும் முதல்வர் தப்பிக்க அனுமதிக்கமாட்டார்” என்று அவர் கூறினார்.