Jailer 2 Public Review
சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஜோராக வெளியாகியிருக்கிறது. அவரது ரசிகர்கள் திருவிழா போல் இந்த நாளை கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலானவை பாசிட்டிவ்வாகவே அமைந்திருக்கின்றன. அவற்றை இதில் பார்க்கலாம்.
கூலி, வேட்டையன் படங்களின் சறுக்கலுக்கு பிறகு ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர் 2. இதன் முதல் பாகத்தை இயக்கி மெகா வெற்றி கொடுத்த நெல்சனே அதீத பொறுப்புடன் இதனை இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்தவர்கள் பெரும்பாலானாலும் இதில் இடம்பெற்றிருக்கிறார்கள். மேலும், வித்யா பாலன், ஹிருத்திக் ரோஷன், எஸ்.ஜே.சூர்யா,மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் இதில் இணைந்திருக்கிறார்கள். அனிருத் வழக்கம்போல் இசையமைத்திருக்கிறார்.
ஜெயிலர் 2 பப்ளிக் விமர்சனம்: படமானது அதீத ஹைப்புடன் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள். ஒரு ரசிகர் பேசுகையில், "தலைவரை அடிக்கவே முடியாது. ஜெயிலர் 3க்கு வெயிட்டிங். இந்தப் படம் வேற லெவல். ஆயிரம் கோடி ரூபாயை இந்தப் படம் வசூலிக்கும். நெல்சன் தெளிவாக செய்திருக்கிறார். அடிபொலி" என கொண்டாடிவிட்டு சென்றார்.
ரசிகை சொன்னது: அவரைத் தொடர்ந்து ரசிகை ஒருவர் பேசுகையில், "குடும்பத்துடன் இந்தப் படத்தை தாரளமாக பார்க்கலாம். சூப்பராக இருக்கிறது. சென்ட்டிமென்ட் காட்சிகளும் நன்றாக அமைந்திருக்கின்றன. எல்லா சீனும் சூப்பராக வந்திருக்கின்றன. மகனை பற்றி சொல்லும்போது ரொம்பவே ஃபீலாகிரது. எல்லோருமே அருமையாக நடித்திருக்கிறார்கள். இதை முடித்துவிட்டு அடுத்த பாகமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்" என்றார்.
சூப்பர் ஸ்டார்னாலே மாஸ்தான்: நெல்சன் சிறப்பாக செய்திருக்கிறார். ஹிருத்திக் ரோஷன் வரும் சீன் எல்லாம் பயங்கரமாக கொடுத்திருக்கிறார். அனிருத்தின் பிஜிஎம்மும் படத்தை உயர்த்துகிறது. ஹிருத்திக் சீரியஸாக வருகிறார். க்ளைமேக்ஸில் வரும் வசனம் பட்டாசு. அவரை யாராலும் அழிக்கவே முடியாது. அடுத்தததாக தர்மன் படத்துக்கும், கமலுடன் சேர்ந்து நடிக்கும் படத்துக்கும் வெயிட்டிங். கண்டிப்பாக இந்தப் படம் 1000 கோடி அடிக்கும். அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்கள். எல்லா சீன்களிலும் மாஸ். சூப்பர் ஸ்டார் என்றாலே மாஸ்தானே" என்றார்.
இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை: இன்னொருவர் பேசுகையில், "முதல் பாகத்தைவிடவும் பத்து மடங்கு சூப்பராக இருக்கிறது. சும்மா தெறிக்க விட்டிருக்கிறார்கள். அனைவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் கனவான 100 கோடி ரூபாய் வசூலை இது அடிக்கும். ரஜினியிசம் என்பதை காண்பித்துவிட்டார். பட்டையை கிளப்பும். பிரமாண்டமாக இருக்கிறது. டைகர் க்கா ஹுக்கும்தான். க்ளைமேக்ஸ் அருமையாக இருந்தது. இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்.