📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 09:01 PM

Jailer 2 Prashanth's Review

Jailer 2 Prashanth's Review

சென்னை: நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பை இந்தப் படம் பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் விமர்சனத்தை பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் பகிர்ந்திருக்கிறார்.

அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜெயிலர் 2.. ரஜினி நினைத்தால் படையப்பா 2 செய்யலாம், பாட்ஷா 2 செய்யலாம். ஏனெனில் அதற்கெல்லாம் இன்றுவரை எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் செய்யாமல்; ஜெயிலர் 2 செய்கிறார் என்றால்; நெல்சன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்று சொல்லலாம். ஜெயிலர் 2 சூப்பர் ஷோ அழகான யோசனை. அதற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை பொறுத்தவரை, வேறு யாரிடமாவது சென்று சொல்லியிருந்தால் யோவ் போய்யா என சொல்லியிருப்பார்கள்.

ரஜினியின் ரோல்: நமோ நாராயணனுக்கு அசிஸ்டென்ட்டாக இருக்கும்படி ஒரு ரோல். இரண்டு படங்கள் நடித்தவர்களே அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டார்கள். முதல் பாதில் எல்லாம் அண்டர் ப்ளே செய்திருக்கிறார். செஸ் ஆடும் சீனை எல்லாம் படத்தில் பாருங்கள். தியேட்டரே சிரிக்கும். யோகிபாபு அண்ணன் நெல்சனோடு சேர்ந்தால் மட்டும் பழையபடி மாறிவிடுகிறார். அது ஒர்க் அவுட்டும் ஆகிறது. எஸ்.ஜே.சூர்யா படத்தில் வருகிறார். அந்த ரோல் சூப்பராக இருக்கிறது. அவர் செய்யப்போகும் மேனரிசம் முன்கூட்டியே தெரிகிறது. அது அப்படி தெரியக்கூடாது. அதை வரும்காலங்களில் திருத்திக்கொள்வார்.

ஹிருத்திக் ரோஷன் வர காரணம்: கலாநிதி மாறனே சென்று அழைத்தாலும் ஹிருத்திக் ரோஷன் வரமாட்டார். அவர் வந்திருப்பதற்கு ரஜினி மட்டும்தான் காரணம். அந்த ரோலை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். முதல் பாதி விறுவிறு என்று போகிறது. கூஸ்பம்ப்ஸ் இல்லாமல் வரவே மாட்டீர்கள். இரண்டாவது பாதியில் கொஞ்சம் தொய்வு வருகிறது. ஜெயிலர் முதல் பாகத்திலும் வந்தது. போகப்போக பிக்கப் ஆகிவிடுகிறது. க்ளைமேக்ஸில் பேசும் வசனம் எல்லாம் சூப்பர். அவர் அழிய வேண்டும் என 90களிலிருந்து பேசுகிறார்கள். அவர்கள்தான் அழிந்துவிட்டார்கள். இவர் அங்கேயே நிற்கிறார்.

அவர்களுக்கு பெரிய மனது: கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அது ஒரு பிரச்னையாக இருக்கிறது. ஓவர் ஆலாக படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால்' முழு திருப்தியோடு ஒரு என்ட்டெர்டென்மெயின்ட்டோடு வெளியே வருவீர்கள். அந்த உணர்வைத்தான் இந்தப் படம் கொடுக்கும். ரஜினியை நானும் விமர்சித்திருக்கிறேன். இதில் அப்படி எனக்கு தோன்றவில்லை. நெல்சன் திலீப்குமார் பெயரை காப்பாற்றிக்கொண்டார். கேமியோ ரோல்கள் செய்தவர்களுக்கு உண்மையில் பெரிய மனது.

ரஜினிக்கு நன்றி: இறுதியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும். என் அப்பா இறந்தபோது இன்சூரன்ஸ் க்ளியர் ஆவது தாமதமானது. அந்த சமயத்தில் ரஜினியை அடிக்கடி சந்திக்கக்கூடிய ஒருவர்; ரஜினியிடம் சொல்லித்தான் அது முடிந்தது. ஆயுள் முழுவதும் ரஜினி சாருக்கு எனது குடும்பம் நன்றியோடு இருக்கும். சரியான நேரத்தில் அப்பாவின் இறுதி காரியங்கள் நடப்பதற்கு அதுதான் காரணம். அந்த நன்றியை மறந்தால் நான் மனிதனே இல்லை. நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜெயிலர்தான்" என்றார்.