📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 10:01 AM

Jailer 2 Day 4 Box Office

Jailer 2 Day 4 Box Office

சென்னை: ரஜினியும், நெல்சன் திலீப்குமாரும் முதன்முதலில் இணைந்த ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டடித்தது. இதனையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கினார்கள். படமானது சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கும் சூழலில்; அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜெயிலர் படத்தின் முதல் பாக வெற்றிக்கு பிறகு ரஜினியும், நெல்சன் திலீப்குமாரும் இணைந்திருக்கும் படம் ஜெயிலர் 2. ரஜினி கடந்த வருடத்தில் நடித்த கூலி, அதற்கும் முன்னதாக நடித்த வேட்டையன் ஆகிய படங்கள் தோல்வியடைந்ததால் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட நம்பிக்கை வைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. எக்கச்சக்க நம்பிக்கையை வைத்து ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள்.

எப்படி இருந்தது படம்?: தமிழ் சினிமா வரலாற்றில் சிங்கம், ஜிகர்தண்டா படங்களின் இரண்டாவது பாகத்தை தவிர்த்து மற்ற எந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே அந்த லிஸ்ட்டில் ஜெயிலர் 2 சேர்ந்துவிடுமோ என்று பயமும் இருக்கத்தான் செய்தது. நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. இது முழுக்க முழுக்க நெல்சன் படமாகவே உருவாக்கப்பட்டிருந்தது. முதல் பாதி முழுவதும் நமோ நாராயணா, யோகிபாபு, சுராஜ் ஆகியோரின் காமெடியும், இரண்டாவது பாதியில் ஆக்‌ஷன், எமோஷன் என பக்கா கமர்ஷியல் பேக்கேஜாக கொடுத்திருந்தார் இயக்குநர்.

ஒரு சூப்பர் ஸ்டார்தான்: அதேபோல் ரஜினிகாந்த் மிரட்டிவிட்டார். சண்டை காட்சிகளில் அவர் சண்டை போடாவிட்டாலும்; அவர் தனது டீமை வைத்து எதிரிகளை காலி செய்யும் விதம் எல்லாம் கூஸ் பம்ப்ஸாக அமைந்தன. உண்மையில் அவர் ஆராகாந்த் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரஜினிகாந்த் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார். போதாக்குறைக்கு அனிருத்தின் இசையும் பக்காவாக பொருந்திப்போக; தியேட்டரே ஸ்தம்பித்து போனது.

உறுதி கொடுக்கும் ரசிகர்கள்: சொல்லப்போனால் முதல் பாகத்தைவிடவும் இரண்டாவாது பாகத்தை இன்னும் தரமாக நெல்சன் திலீப்குமார் கொடுத்துவிட்டார். இந்தப் படத்தின் வெற்றி மேற்கொண்டு அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு அழைத்து செல்லும் என்று நம்பலாம். அதேபோல், தமிழ் சினிமாவின் கனவான ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் நிச்சயம் அள்ளும் என்று உறுதியாக நம்புகிறார்கள் ரசிகர்கள்.

வசூல் நிலவரம்: அதற்கான அறிகுறிகள் ரிலீஸின் முதல் நாளிலிருந்தே தெரிய தொடங்கியது. முதல் நாளே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் குறையவில்லை. இந்நிலையில் Sacnilk இணையதளம் ஜெயிலர் 2 நான்காவது நாளில் செய்திருக்கும் வசூல் குறித்த தரவுகளை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 55 கோடியே 85 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிகிறது.

தமிழில் 39 கோடியே 95 லட்சம் ரூபாயும், தெலுங்கில் ஒன்பது கோடியே 50 லட்சம் ரூபாயும், ஹிந்தியில் ஐந்து கோடியே 75 லட்சம் ரூபாயும், கன்னடத்தில் 65 லட்சம் ரூபாயையும் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் இந்தியாவில் மட்டும் அப்படம் நான்கு நாட்களில் 234 கோடி ரூபாயையும், உலகளவில் நேற்று 40 கோடி ரூபாயையும் வசூலித்த ஜெயிலர் 2; இதுவரை மொத்தம் உலகளவில் 424 கோடியே 25 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.