இன்று ஆச்சரியங்கள் நிறைந்த மறக்க முடியாத நாள்
இன்று ஆச்சரியங்கள் நிறைந்த மறக்க முடியாத நாள் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
ஜூன் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Published : June 21, 2026 at 7:11 AM IST
மேஷம்: இன்று பல விஷயங்கள் மீது ஈர்ப்பு கொள்வீர்கள். ஆனால், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை நினைவில் கொள்ளவும். உங்களது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர்களுடன் நேரம் செலவிடுவது முக்கியம்.
ரிஷபம்: இன்று சிந்தனை மிகுந்த நாளாகவும், ஆதாயமான நாளாகவும் இருக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்கவில்லை என்றால், ஏமாற்றம் கொள்ள வேண்டாம். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறி, நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.
மிதுனம்: தினசரி பணியிலிருந்து விலகி, சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வதால், மன அழுத்தம் ஏற்படலாம். உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.
கடகம்: புகழ் பெற வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும். சரியான திட்டமிடல் மூலம் பணிகளை நிறைவு செய்வீர்கள். கடவுள் ஆசியால் உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.
சிம்மம்: இன்று சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். அனைத்து பணிகளையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளும் எளிதில் நிறைவடையும். காலையில் மனதில் பட்டதையும், மாலையில் சிந்தித்தும் செயல்படுவீர்கள்.
கன்னி: பெண்கள் சமைப்பதிலும், அதைப் பரிமாறுவதிலும் மகிழ்ச்சியடைவார்கள். அதனால், உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு விருந்து கொடுக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்: இன்று வேலைப்பளு அதிகம் உள்ளதால், குடும்பத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சாதகமான நாள். மேலும், குறைந்த முயற்சியில் அதிக பலன் கிடைக்கும்.
விருச்சிகம்: கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பவும். இதன்மூலம் குழப்பங்களையும், சச்சரவுகளையும் தவிர்க்கலாம். எனவே, கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து, முக்கியமான விஷயங்களை கவனிக்கவும்.
தனுசு: வர்த்தகர்களுக்கு இன்று லாபகரமான நாள். உங்கள் கனவுகள் நிறைவேறும், கடன் தொடர்பான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். மனதிற்குப் பிடித்தவர்கள் சந்தோஷப்படும் வகையில் செயல்படுவீர்கள்.
மகரம்: இன்று வேலைப்பளு அதிகம் இருப்பதால், சோர்வாக உணர்வீர்கள். தியானம் செய்தால் கூட மன அழுத்தத்தை நீக்க முடியாமல் தவிப்பீர்கள். அதேசமயம் கார் அல்லது வீடு வாங்க இது சாதகமான நாள். புது வீட்டிற்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.
கும்பம்: இன்றைய தினம் எதிர்பாராத ஒரு நாளாக இருக்கும். உங்களது போட்டியாளர்களால் உங்களது நடவடிக்கைகளை கணிக்க முடியாது. போட்டி அதிகமாக இருக்கும்போது, இந்த நிலை சாதகமாக இருக்கும். உங்களது பணிகளை முடித்துவிட்டு, சிறிது ஓய்வு எடுத்து அடுத்த நாளுக்காக தயாராகவும்.
மீனம்: நாளின் முதல் பாதியில், சமூக ரீதியான பொறுப்புகளிலும், தினசரி பணிகளிலும் அதிகம் நேரம் செலவிடுவீர்கள். மதிய நேரத்தில் உங்களுக்கு உதவி செய்ய சிலரை அழைக்கக் கூடும். உங்களது அன்பான நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்று ஆச்சரியங்கள் நிறைந்த மறக்க முடியாத நாளாக இருக்கும்.