📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 08, 2026 07:03 AM

இன்றைய ராசிபலன்: 7.9.2026

இன்றைய ராசிபலன்: 7.9.2026

வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

நன்மைகள் நடைபெறும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். சகோதர வழியில் அனுகூலம் உண்டு.

குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும். தாமதப்பட்ட காரியங்கள் துரிதமாக நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.

நிதி நிலை உயரும் நாள். அரசியல்வாதிகளால் அனுசுடலம் உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும்.

செல்வாக்கு மேலோங்கும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டு வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம் பற்றிய தகவல் உண்டு.

விருச்சிகம்

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. விரயங்கள் அதிகரிக்கும்.

மதியத்திற்கு மேல் கவனமுடன் செயல்படவேண்டிய நாள். வீண் விரயமுண்டு. நட்பு பகையாகலாம். பயணங்களால் மாற்றமுண்டு.

வரன்கள் வாயில் தேடி வந்து சேரும் நாள். பாசம் மிக்க வர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள், நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வரவு உண்டு.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அருகில் உள்ளவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.