📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 23, 2026 11:04 AM

IND vs SL 2வது டெஸ்ட்.. குல்தீப் யாதவ் நீக்கம்.. இந்திய அணியில் அறிமுகமான சரண்ஷ் ஜெயின்

IND vs SL 2வது டெஸ்ட்.. குல்தீப் யாதவ் நீக்கம்.. இந்திய அணியில் அறிமுகமான சரண்ஷ் ஜெயின்

IND vs SL 2வது டெஸ்ட்.. குல்தீப் யாதவ் நீக்கம்.. இந்திய அணியில் அறிமுகமான சரண்ஷ் ஜெயின்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அனுபவ சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சரண்ஷ் ஜெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா தொப்பியை வழங்கினார்.

முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ், அதிக விக்கெட் வீழ்த்தாத நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கடந்த நாட்களாக வலைப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சரண்ஷ் ஜெயினுக்கு பிளேயிங் 11 இல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காலேயில் ஆடுகளம் மெதுவாக மாறி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகத் திரும்பத் தொடங்கியது என்றும், ஆனால் கொழும்பில் ஆடுகளம் கடினமாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்வதற்கு இது மிகவும் உகந்ததாக இருக்கும் என்றும் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், இலங்கை அணியிலும் சில கட்டாய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காலே டெஸ்டில் பீல்டிங் செய்த போது மூளை அதிர்ச்சி பாதிப்புக்கு உள்ளான தினேஷ் சண்டிமால் இப்போட்டியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். மேலும் நிஷான் மதுஷ்கா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர்களுக்குப் பதிலாக கமில் மிஷாரா அறிமுக வீரராகக் களம் இறங்குகிறார். மேலும் முதல் போட்டியில் சண்டிமாலுக்கு மாற்று வீரராகக் களம் கண்ட பசிந்து சூரியபண்டாரவும் இப்போட்டியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், சரண்ஷ் ஜெயின், மானவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இலங்கை அணி: லஹிரு உதாரா, கமில் மிஷாரா, பசிந்து சூரியபண்டார, கமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, கேசரா நுவந்தா, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ.