📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 11:33 AM

IND vs AFG: இந்திய வீரர்கள் சரியாக கேட்ச் பிடித்திருந்தால், இந்த 32 வயது வீரர் அதிக விக்கெட் எடுத்திருப்பார்

IND vs AFG: இந்திய வீரர்கள் சரியாக கேட்ச் பிடித்திருந்தால், இந்த 32 வயது வீரர் அதிக விக்கெட் எடுத்திருப்பார்

IND vs AFG: இந்திய வீரர்கள் சரியாக கேட்ச் பிடித்திருந்தால், இந்த 32 வயது வீரர் அதிக விக்கெட் எடுத்திருப்பார்-கையிப்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பீல்டர்கள் கேட்சுகளை சரியாகப் பிடித்திருந்தால், நட்சத்திர ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் இன்னும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்ற நிலையில், ஸ்பின்னர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராக அக்சர் படேல் திகழ்ந்தார். இருப்பினும், மூன்று போட்டிகளிலும் அவரது பந்துவீச்சில் கேட்சுகள் தவறவிடப்பட்டன.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில், அக்சர் படேல் வீசிய பந்தில் இஷான் கிஷன் ஒரு எளிதான கேட்சை தவறவிட்டார். இதேபோல், அடுத்தடுத்த போட்டிகளில் திலக் வர்மா, ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும் கேட்சுகளை தவறவிட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட்டுகள் பறிபோயின. இந்த சவால்களுக்கு மத்தியிலும், அவர் 16.00 சராசரியிலும், 6.00 எகானமியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

இது குறித்து பேசிய முகமது கையிப், "இந்தத் தொடரின் மூலம் நமக்கு கிடைத்த மிகப்பெரிய சாதகமான விஷயம் அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தான். இவர்களுடன் நிதிஷ் குமார் ரெட்டியும் சிறப்பாக செயல்பட்டார். நாம் அக்சர் படேலின் பெயரை அடிக்கடி குறிப்பிட்டுக் பாராட்டுவதில்லை, ஆனால் இந்தத் தொடரில் அவரது பந்துவீச்சில் 3-4 கேட்சுகள் தவறவிடப்பட்டதால் அவர் சற்று துரதிர்ஷ்டவசமாகவே இருந்தார்."

"அந்த கேட்சுகள் சரியாகப் பிடிக்கப்பட்டிருந்தால், அவர் இந்தத் தொடரில் இன்னும் கூடுதலான விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அவர் பவர்பிளேயில் புதிய பந்துடன் வந்து விக்கெட் எடுக்கிறார், பின்னர் பழைய பந்திலும் சிறப்பாக பந்துவீசுகிறார்" என்று முகமது கைஃப் கூறியுள்ளார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட உள்நாட்டு டி20 தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களுக்குப் பிறகும் ரவி பிஷ்னோய் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். காயமடைந்த வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக களமிறங்கிய பிஷ்னோய், 14.50 சராசரியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது குல்தீப் யாதவை விட ரவி பிஷ்னோய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக கைஃப் தெரிவித்தார்.