📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 04, 2026 07:06 PM

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம் விலை...!

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம் விலை...!

இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. செஞ்சுரி அடித்த சின்ன வெங்காயம் விலை...!

வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது சின்ன வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது.

திண்டுக்கல் - கரூர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வெங்காய சந்தைக்கு, கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. போதிய மழையின்மை மற்றும் வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வது உள்ளிட்ட காரணங்களால் சந்தைக்கு வரும் வெங்காயத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

வழக்கமாக 50 கிலோ எடை கொண்ட சுமார் 5,000 மூட்டைகள் வரை வரத்து இருக்கும் நிலையில், தற்போது 1,000 முதல் 1,200 மூட்டைகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக முதல் தர சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரம் கிலோ ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை சந்தையில் 10 கிலோ ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயத்தின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் 10 கிலோ மூட்டை விலை ரூ.500-ல் இருந்து ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

மழைப்பொழிவு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில், பெரிய வெங்காயம் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சின்ன வெங்காயத்தையும் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.