📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 02, 2026 05:02 PM

Don't Trouble The Trouble X Review: ராஜமெளலி, பகத் ஃபாசிலை நம்பிப் போனா.. அவ்ளோதான்.. புலம்பும் ஃபேன்ஸ்!

Don't Trouble The Trouble X Review: ராஜமெளலி, பகத் ஃபாசிலை நம்பிப் போனா.. அவ்ளோதான்.. புலம்பும் ஃபேன்ஸ்!

சென்னை: ராஜமெளலி தயாரிப்பில் பகத் ஃபாசில் நடித்துள்ள மேஜிக் ஃபேண்டஸி படமான டோன்ட் ட்ரபிள் தி ட்ரைபிள் திரைப்படமும் இன்று திரையில் வெளியானது. காலாண்டு விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளை டார்கெட் செய்வது போல ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன.

ஃபேண்டஸி படமான இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக கவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் ரொம்ப ட்ரபிள் பண்ணிடுச்சு, அந்த பக்கமே போக வேண்டாம் என எக்ஸ் பக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த வாரம் வெளியான படங்களிலேயே விஜய் சேதுபதி, சாய் நடித்த பத்தா திரைப்படம் தான் குழந்தைகளை கவரும் படமாக உள்ளது என்கின்றனர்.

ட்ரபிள்சம் வாட்ச்: விமர்சகர் வெங்கி டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை பார்த்துவிட்டு ரொம்பவே ட்ரபிள்சம் வாட்ச் என சோலியை முடித்துள்ளார். பகத் ஃபாசில் டப்பிங் முதற்கொண்டு தெலுங்கு அறிமுக படத்தில் சரியாக இல்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே மொத்த படத்தில் ரசிக்கும் படியாக உள்ளது. பகத் ஃபாசில் எவ்வளவு தான் முயற்சித்தாலும் அவர் ஒருவரால் மட்டுமே படத்தைக் காப்பாற்ற முடியவில்லை. இயக்குநர் சிறு பிள்ளைத்தனமாகவே கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கியது தான் சோதனை என விமர்சித்துள்ளார்.

டிசாஸ்டர்: டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் டிசாஸ்டர் படம். 5க்கு 1.5 மார்க் தான் கொடுக்க முடியும். தயவு செய்து இந்த படத்தை தியேட்டரில் யாரும் பார்க்க வேண்டாம். ஸ்கிப் செய்து விடலாம் என்றே இந்த நெட்டிசன் பங்கமாக ரோஸ்ட் செய்துள்ளார்.

மகேஷ் பாபு, என்டிஆர் ரோஸ்ட்: ராஜமெளலி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வாரணாசி படத்தில் ஹீரோவாக நடித்து வரும் மகேஷ் பாபு முன்னதாக பாராட்டித் தள்ளினார். அதே போல ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆரும் இதுதான் பெஸ்ட் படம் என்கிற ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளிய நிலையில், இன்று படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே என இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.