📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 15, 2026 01:33 AM

சூப்பர் ஸ்டாரின் ஒற்றை போன் கால்..மண்டாடி' படத்தை பார்த்து மிரண்டுபோன ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டாரின் ஒற்றை போன் கால்..மண்டாடி' படத்தை பார்த்து மிரண்டுபோன ரஜினிகாந்த்!

சென்னை: விடுதலை, கருடன், கொட்டுக்காளி, மாமன் படங்களை தொடர்ந்து நடிகர் சூரி கதநாயகனாக நடித்துள்ள படம் மண்டாடி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.

செப்டம்ர் 10ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் ரூ 50 கோடி வசூலை நெருங்கி உள்ளது. இப்படத்தை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளனர். அதே போல சூரி நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். உண்மையில் இந்த படத்திற்காக சூரி கடுமையாக உழைத்து இருக்கிறார் எனபடம் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

பாராட்டிய ரஜினிகாந்த்: இந்நிலையில் படத்தைப் பார்த்த தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், படத்தைப் பெரிதும் பாராட்டி நடிகர் சூரிக்கு போன் செய்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதை சூரி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் மண்டாடி படத்தை பார்த்து ரசித்தாக கூறினார். அவரது இதயப்பூர்வமான அழைப்பு எனக்கும் எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் எல்லை இல்லை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவரது குரலைக் கேட்ட விலைமதிப்பற்ற தருணம் என மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற சூரி பதிவிட்டுள்ளார்.

சரத்குமார் பாராட்டு: முன்னதாக நடிகர் சரத்குமார் மண்டாடி படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.... அதில், இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்... அந்தப் பதிவில், "மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை.... இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனா... அதுதான் உண்மை. முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி... அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது என பாராட்டி இருந்தார்.