📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 11, 2026 12:04 AM

சமூக மாற்றத்திற்கான கலைப்பார்வை: ‘டோரதி’ திரைப்படம் தரும் செய்தி

சமூக மாற்றத்திற்கான கலைப்பார்வை: ‘டோரதி’ திரைப்படம் தரும் செய்தி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் அண்மையில் வெளியாகி பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘டோரதி’.

தமிழ் சினிமாவில் கதைக்களம், உருவாக்கம் சார்ந்த பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம்பெற்றுள்ளது.

கிராமத்துப் பின்னணியில் குண்டர் கும்பல் பின்னணி சார்ந்த கதையாகத் தொடங்கும் இத்திரைப்படம், எதிர்பாராத திருப்பமாக திருநங்கைகளின் வாழ்வியல், சமூக அங்கீகாரம் பற்றிய ஆழமான தளத்திற்கு நகரும்.

நெருங்கிய உயிர் நண்பன் ஒருவன் திருநங்கையாக மாறும் சூழலில், அதனை அந்த நண்பனும் அவனது சுற்றமும் ஒட்டுமொத்த சமூகமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை உணர்வுபூர்வமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

திரைப்படத்திற்குச் சில எதிர்மறை விமர்சனங்களும் சமூக ஊடகங்களில் பலவிதக் கருத்து மோதல்களும் எழுந்தபோதிலும் பெரும்பான்மையான பார்வையாளர்களிடையே நேர்மறையான வரவேற்பே கிடைத்துள்ளது.

இதுகுறித்து அண்மையில் சென்னையில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “எதிர்மறையாகப் பேசியவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ரசிகர்களை மட்டுமே நம்பி படத்தை உருவாக்கினேன். ஆணாகப் பிறப்பதை பெருமையாகக் கருதும் சமூகத்தில், ஆண் உடலுக்குள் இருக்கும் பெண்மையைக் கண்டு காதலிக்கும் ஒரு பயணமே இக்கதை.

“படம் பார்த்த பல ஆண்கள், இனி திருநங்கைகளைப் பார்க்கும் தங்கள் பார்வை மாறும் என கூறியதே படத்தின் உண்மையான வெற்றி,” எனத் தெரிவித்தார்.

மேலும், படத்தில் பயன்படுத்தப்பட்ட சில அடையாளம் சார்ந்தப் பொருள்களால் ‘இலுமினாட்டி’ தொடர்புகள் இருப்பதாக எழுந்த வதந்திகளையும் அவர் மறுத்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை இப்படத்தின் உணர்வுபூர்வமானக் காட்சிகளுக்குப் பலம் சேர்த்துள்ளது.