📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 12, 2026 09:05 PM

சிவகாசியில் சூடுபிடித்த பட்டாசு விற்பனை: வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

சிவகாசியில் சூடுபிடித்த பட்டாசு விற்பனை: வெளியூர் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!

சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது. வெளியூர் வாகனங்களால் சிவகாசியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாடு முழுவதும் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிவகாசியில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுகளில் பல கோடி மதிப்புள்ள பட்டாசுகள் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கிவரும் பட்டாசு கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கார் மற்றும் வேன்களில் வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

வெளியூர்களில் இருந்து பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்கள் காலை 10 மணிக்கு பின்னர் 1 மணிக்குள் ஒரேநேரத்தில் விருதுநகர் மற்றும் சாத்தூர் சாலை வழியாக நகருக்குள் நுழைந்தால் இந்த 2 சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாரின் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாமல் போனது. அடுத்து வரும் தினங்களில் இன்னும் அதிக அளவில் வாகனங்கள் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலை ஏற்படும். இதுபோன்ற காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.