📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 10, 2026 12:03 PM

சிஜேபி போராட்டம்: பயந்து நடுங்கி போராட்டத்தை நசுக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

சிஜேபி போராட்டம்: பயந்து நடுங்கி போராட்டத்தை நசுக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது காவல்துறை. இந்தநிலையில் யந்து நடுங்கி போராட்டத்தை நசுக்கிறார் முதல்-அமைச்சர் விஜய் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த டம்மி முதல்-அமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதல்-அமைச்சர் நிரூபித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது என அதில் பதிவிட்டுள்ளார்.