📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 12, 2026 07:31 AM

‘சாலமன் பாப்​பையா... தமிழின் பெருமையை அடுத்த தலைமுறையினரிடம் சேர்த்தவர்’

‘சாலமன் பாப்​பையா... தமிழின் பெருமையை அடுத்த தலைமுறையினரிடம் சேர்த்தவர்’

மதுரை ஞானஒளிவுபுரத்​தில் உள்ள வீட்​டில் வைக்கப்பட்​டிருந்த சாலமன்​ பாப்​பை​யா​வின்​ உடலுக்​கு அஞ்சலி செலுத்​திய உறவினர்கள்​ மற்​றும்​ பொது​மக்​கள்​.

படம்​: ​நா. தங்​கரத்​தினம்

பேராசிரியர் சாலமன் பாப்​பையா மறைவுக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர்: சாலமன் பாப்​பையா மறைந்த செய்​தி​யறிந்து வேதனை அடைந்​தேன். சிறப்​பான பேச்​சாற்​றல், நகைச்​சுவை உணர்வு மற்​றும் ஆழ்ந்த தமிழ் அறி​வின் மூலம் பொது​மக்​களின் சிந்​தனையை வளப்​படுத்​தி​யதுடன், தமிழ் மொழி மற்​றும் இலக்​கி​யத்​தின் சிறப்பை பல தலை​முறை​யினரிடம் கொண்டு சேர்த்த பெரு​மைக்​குரிய​வர். அவரது மறைவு தமிழ் இலக்​கிய உலகுக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும்.

முதல்​வர் விஜய்: தமிழின் பெரு​மை​யை​யும், தமிழர்​களின் வாழ்​வியலை​யும் பட்​டிமன்ற மேடைகள் வழி​யாக உலகறிய செய்த தமிழறிஞர் சாலமன் பாப்​பையா மறைந்த செய்​தி​யறிந்து வேதனை அடைந்​தேன். நகைச்​சுவை கலந்த பேச்​சாலும், ஆழ்ந்த தமிழ் புலமை​யாலும், சமூகச் சிந்​தனை​களை எளிய முறை​யில் மக்​களிடம் கொண்டு சேர்த்​தவர். பட்​டிமன்​றங்​களை வெறும் பொழுது​போக்கு நிகழ்​வு​களாக அல்​லாமல், சிந்​தனையைத் தூண்​டும் அறி​வுத் தளங்​களாக மாற்​றிய​தில் சாலமன் பாப்​பை​யா​வின் பங்கு மகத்​தானது. அவரது மறைவு தமிழ்​கூறு நல்​லுல​குக்கு ஈடு​செய்ய இயலாத பேரிழப்​பாகும்.

திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின்: பொங்​கல், புத்​தாண்டு என பண்​டிகை நாட்​கள் பாப்​பை​யா​வின் பட்​டிமன்​றத்​தோடு தான் தமிழர்​களுக்கு தொடங்​கும். அந்த அளவுக்கு தமிழர்​களின் அன்​றாட வாழ்க்​கையோடு இரண்டற இயைந்​து​விட்ட பெரு​மைக்​குரிய​வர். பட்​டிமன்​றம் என்​றாலே பாப்​பை​யா​தான். மதுரை​யின் பெரு​மைமிகு அடை​யாள​மாகவே மாறிப்​போன பாப்​பையா நம்மை விட்டுப் பிரிந்​ததை மனம் ஏற்க மறுக்​கிறது. தனது அரும்​புதல்​வர்​களுள் ஒரு​வரை தமிழ்த்​தாய் இழந்​து​விட்​டாள்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: நகைச்​சுவை கலந்த பேச்​சால் மக்​களை சிரிக்க வைத்​ததுடன், தமிழ் மொழி​யின் பெரு​மை​யை​யும் நம் பண்​பாட்​டின் சிறப்​பை​யும் அடுத்த தலை​முறை​யினரிடம் கொண்டு சேர்த்த பெரு​மைக்​குரிய​வர் சாலமன் பாப்​பை​யா. அவரது மறைவு தமிழ் இலக்​கிய உலகுக்​கும், பட்​டிமன்ற துறைக்​கும் ஈடு செய்ய முடி​யாத பேரிழப்​பாகும்.

பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தனது நகைச்​சுவை கலந்த பேச்​சாற்​றலால் தலை​முறை​களை மகிழ்​வித்த பேராசிரியர் சாலமன் பாப்​பை​யா​வின் மறைவு செய்தி மிகுந்த வேதனை​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. ஒரு தலை​முறை​யின் நினை​வு​களோடு பின்​னிப் பிணைந்த அவரது இழப்​பு, தமிழ் உலகுக்கே பேரிழப்​பாகும்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர்: பட்​டிமன்​றங்​களில் நடு​வ​ராக மிகுந்த நகைச்​சுவை உணர்​வுடன் ஆழமான, அறி​வுப்​பூர்​வ​மான அற்​புத​மான கருத்​துகளை வெளிப்​படுத்தி தமிழ் மக்​கள் மனதில் நீங்கா இடம் பெற்​றவர். திருக்​குறளுக்கு உரை எழு​தி​ய​வர். சாலமன் பாப்​பை​யா​வின் இழப்பு தமிழுக்​கும், தமிழ் சமு​தா​யத்​துக்​கும் பேரிழப்​பாகும்.

பாமக தலை​வர் அன்​புமணி: உலகம் முழு​வதும் சாலமன் பாப்​பை​யாவை அறி​யாத தமிழர்​களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்​சுவை​யாக​வும், நாகரி​க​மாக​வும் பட்​டிமன்​றங்​களை நடத்​தி​யதன் மூலம் அனைத்து தமிழ்க் குடும்​பங்​களுக்​கும் அறி​முக​மானவர். சாலமன் பாப்​பை​யாவை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கல்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: சாலமன் பாப்​பை​யா​வின் மறைவு செய்தி துன்ப இடி​யாக என்னை தாக்​கியது. 65 ஆண்​டு​களாக தமிழ் இலக்​கி​யத்​துக்​கும், செந்​தமிழ் மொழிக்​கும் அருட்​கொடை​யாக பெரும் சிறப்பு செய்​தவர். அரசு மரி​யாதை​யுடன் அவரது நல்​லடக்​கம் நடை​பெற வேண்​டும்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: தனித்​து​வ​மான பேச்​சாற்​றல், நகைச்​சுவை கலந்த தமிழ் நடை என பட்​டிமன்​றங்​கள் வாயி​லாக இலக்​கி​யத்​தை​யும், தமிழின் சிறப்​பை​யும் எளிய மக்​களிடம் கொண்டு சேர்த்த பேராசிரியர் சாலமன் பாப்​பையா கால​மான செய்தி வேதனை அளிக்​கிறது.

மார்க்​சிஸ்ட் கம்​யூ. மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: தமிழ்ப் புலமை​யாலும், நகைச்​சுவை​யி​னாலும் தமிழ் பட்​டிமன்​றத்​தை, உலகம் முழு​வதும் வாழும் தமிழர்​களிடையே கொண்டு சேர்த்​தவர். அவர் மறைவு தமிழ் இலக்​கிய உலகுக்​கும் பட்​டிமன்ற கலைக்​கும் தமிழ் ஆர்​வலர்​களுக்​கும் ஏற்​பட்ட பேரிழப்​பாகும்​.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், இந்​திய கம்​யூ. மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன், வீ த லீடர்ஸ் தலை​வர் அண்​ணா​மலை, ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து, பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன், முன்​னாள் எம்பி சு.​திரு​நாவுக்​கரசர், கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், இந்​திய தவ்​ஹீத்​ ஜமாஅத்​ பொதுச்​செய​லா​ளர்​ முஹம்​மது ஷிப்​லி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், உள்​ளிட்​டோரும்​ இரங்​கல்​ தெரிவித்​துள்​ளனர்​.